Recents in Beach

கண்களில் உள்ள கரு வளையம் குறைய


செய்முறை:

சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் குறையும்.

செய்முறை:

ஆப்பிளை பால் ஊற்றி நன்றாக அவித்து மசிந்து கூழ் போல செய்து கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் குறையும்.

தேவையான பொருட்கள்:இளநீர் – 1 லிட்டர்
முசுமுசுக்கை முழுச்செடி -100 கிராம்
கரிசலாங்கண்ணிச் சாறு – 100 மி.லி
பொன்னாங்கண்ணிச் சாறு – 100 மி.லி
வேப்பங்கொழுந்து – 100 கிராம்
கடுக்காய்த் தோல் – 25 கிராம்
தான்றிக்காய் – 25 கிராம்
நெல்லிக்காய் வற்றல் – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
மரமஞ்சள் – 25 கிராம்
தேத்தான் கொட்டை – 25 கிராம்
கோரைக் கிழங்கு – 25 கிராம்
மருதோன்றி இலை – 100 கிராம்
வெட்டிவேர்- 100 கிராம்
செம்பருத்திப் பூ- 100 கிராம்
எள் எண்ணெய் – 11/2 லிட்டர்
செய்முறை:

இளநீரை ஒரு பானையில் ஊற்றி கரிசலாங்கண்ணிச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு ஆகிய இரண்டு சாறுகளையும் அதனுடன் ஊற்றி மருதோன்றி இலை, வெட்டி வேர் செம்பருத்திப் பூ இவைகளையும் இடித்துப் போட்டு, சிறு தீயாக எரித்துக் கொள்ளவேண்டும். வேறு பானையில் எள் எண்ணெயை ஊற்றி சிறு தீயாக எரித்து முன் பானையில் உள்ள மருந்தை ஊற்றி 30 நிமிடங்கள் சிறு தீயாக எரித்துக் கொள்ளவேண்டும். கடுக்காய் தோல், தான்றிக்காய், நெல்லிக்காய் வற்றல், மரமஞ்சள், அதிமதுரம், தேத்தான் கொட்டை, கோரைக் கிழங்கு இவைகளை ஒன்று இரண்டாக தட்டி, மண் சட்டியில் இளம் வறுவலாக வறுத்து இடித்து வடி கட்டவும். வடிகட்டிய தூளை தைலப் பானையில் போட்டு மீண்டும் சிறு தீயாக எரித்து தைல பதத்தில் இறக்கி பாத்திரத்தில் வாயை துணியால் கட்டி 12 மணி நேரம் வெயிலில் வைத்து பத்திரப்படுத்த வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

காலை 8 மணிக்குள் 1 மேசைக் கரண்டி அளவு தைலத்தை தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் தலை முழுக வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் 20 முறைகள் தலைக்கு குளிக்க வேண்டும்.

தீரும் நோய்கள்:

கண் எரிச்சல், புகைச்சல், தலை சுற்று, மயக்கம், பீளை தள்ளுதல், நீர் வடிதல், கண் கூச்சம் ஆகியவைகள் குறையும். கண் குளிர்ச்சியாகும். பார்வை மிகும்.முடி கொட்டுதல் குறையும், செதில் குறையும், முடி வளரும்.

குறிப்பு:

தலை சீவிக் கொள்ள பயன்படுத்த விரும்பினால் 100 மி.லிட்டர் அளவு தைலத்தை 100 மி்.லிட்டர் தேங்காய் எண்ணெய்யை சூடு காட்டி கலந்து தலையில் தடவி சீவலாம். 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இந்தத் தைல் சிறிதும் ஆகாது.