Recents in Beach

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க

Image result for குழந்தைகளுடன் சாப்பிடுதல் இல்லையா

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகளை பட்டியலிடுகிறார் கயல்விழி அறிவாளன்.

ஒன்றாக உணவு நேரம்:

உங்கள் உணவு நேரத்தை மகிழ்ச்சியாகவும் டென்ஷன் இல்லாமலும் வைத்திருங்கள். உங்கள் குழந்தை அடம்பிடிப்பார்கள் என்று முன்பே உணர்ந்திடுங்கள். குடும்பமாக ஒருவேளை உணவாவது உண்ணுங்கள். அவர்கள் மற்றவர்கள் உண்பதை பார்த்தால் உணவில் உள்ள ஆர்வம் அதிகரிக்கும். தொலைக்காட்சியை பார்ப்பதோ அல்லது ஃபோன் பயன்படுத்துவதோ உணவு உண்ணும் நேரத்தில் தவிர்த்திடுங்கள். உண்ணும் உணவின் நற்குணங்களை பகிர்ந்திடுங்கள். காய்கறி, பழங்கள் மற்றும் கீரைகளை அவர்களைக் கவரும் வண்ணம் நறுக்கிக் கொடுங்கள். இதையெல்லாம் செய்து அவர்களுக்கு உணவின் மேல் உள்ள ஆர்வத்தை பெருக்குங்கள்.

மறைத்து சமையுங்கள்:
கீரை, குடைமிளகாய் மற்றும் ஏராளமான காய்கறிகளை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு காய்கறிகளை வித்தியாசமான வடிவங்களாக அறுத்து அவற்றை பறிமாருங்கள். வெஜ்ஜி பீட்சா சப்பாத்தியாக செய்து கொடுங்கள். சுருட்டிய சப்பத்தியின் நடுவில் காய்கறிகளை மறைத்து விடுங்கள். உணவு வகைகளுக்கு வித்தியாசமான பெயர்களைச் சூட்டுங்கள். இதெல்லாம் காயின் மேல் உள்ள கவனத்தை மாற்றி ஆர்வத்துடன் உண்ண உதவிச் செய்யும்.