Recents in Beach

குழந்தைகள் அதிகம் சோர்வடைய காரணம்


சோர்வு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடியது; குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் அதிகம் சோர்வடைய காரணம்
சோர்வு எனும் உணர்வானது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய சாதாரணமான உணர்வாகும்; குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் அவர்களால் எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செய்ய முடியாது; குழந்தைகள் சோர்வாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவை உட்கொண்டு வருவது தான். ஆகையால் அவர்களுக்கு கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அளிக்க வேண்டியது அவசியம்..!

சரியான உறக்கம் கொள்ளாமல் இருப்பதும், சரியான நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழித்தெழாமல் இருப்பதும் உடலில் சோர்வை ஏற்படுத்தும் காரணங்களாக உள்ளன. எனவே குழந்தைகள் நேரத்திற்கு உறங்கி எழுவதை கவனித்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும். மேலும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு அளித்து, அவர்களை உறங்க செய்து, சுறுசுறுப்புடனும் இருக்கும் வண்ணம் அன்றாட பழக்க வழக்கங்களை கற்று கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பிறந்த பின் தங்களது வளர்ச்சி காலகட்டத்தில் சரியாக வளர புரதச்சத்து அவசியம்; ஒரு நாளைக்கு குறைந்தது 800 - 1000 கலோரிகளையாவது குழந்தைகள் உட்கொள்ள வேண்டும். இது அவர்களின் உடலில் சோர்வு ஏற்படாமல் காத்து, அவர்களை உற்சாகமாக இருக்க உதவும்.

குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், கண்டிப்பாக அவர்களால் சரியாக செயலாற்ற முடியாது; எப்பொழுதும் சோர்ந்து போய் தான் காட்சி அளிப்பர். நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனதே! நம் உடல் சீராக, சரிவர இயங்க அதற்கு போதுமான அளவு நீர்ச்சத்து அவசியம்; ஆகவே இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த நீர்ச்சத்தினை உங்கள் குழந்தைகள் சரியாக பெறுகிறார்களா என்று பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்