Recents in Beach

சாளை மீன் குழம்பு / Chaala Fish Curry/ Sardine Fish Curry


                                               
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
  1. சாளை மீன் - 10
  2. உப்பு - தேவையான அளவு 
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. புளி - சிறிய எலுமிச்சை அளவு                      
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் -3
  2. கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. மிளகு-1 தேக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  6. கறிவேப்பிலை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு -1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம்பருப்பு -1/2 தேக்கரண்டி 
  4. வெந்தயம் -1/2 தேக்கரண்டி 
  5. வெங்காயம் -1/4 
  6. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் மீனை சுத்தமாக கழுவி வைக்கவும். புளியை ஒரு கப் (200மில்லி) தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயைமிதமான சூட்டில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப் பண்ணவும். 
  3. வறுத்த பொருள்களுடன் சீரகம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.
  4. நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு  வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றவும்.
  7. புளித் தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 
  8. மசாலா வாடை போனதும் மீன்களை சேர்த்து வேக விடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
  9. சுவையான சாளை மீன் குழம்பு ரெடி.