Search News

நோயை பிரட்டி போடும் பிரண்டை!


அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட காரணம்?

ஆமணக்கு எண்ணெய் எனும் அதிசய எண்ணெய்- HEALTH TIPS IN TAMIL

ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன. சிற்றாமணக்கிற்கும் பேராமணக்கிற்கும் உள்ள முக்கிய வேற்றுமை அவற்றின் கொட்டைகளின் அளவைப் பொறுத்தது.
சிற்றாமணக்கு சிறிய அளவுள்ள கொட்டையும், பேராமணக்கு பெரிய அளவுள்ள கொட்டையும் கொண்டது. இந்த இரண்டு வகைகளுக்கும்  மருத்துவப் பயன் ஒன்றுதான்.
ஆமணக்கு எண்ணெய், இலைகள், வேர், விதை, காய்கள் அத்தனையும் மருந்தாகப் பயன் தருகின்றன. உடல் வெப்பத்தினால் கண்கள்  சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.
ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும்  பயன்படுத்தப்டுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை விலக்க உதவுகின்றது.
ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில்  மட்டும் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய மஞ்சள் காமாலை குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு  நீக்கிப் பத்தியம் கடைபிடிக்க வேண்டும்.
ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின்  வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும்.
பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில்  வதக்கி, ஒத்தடம் இடலாம்.
கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து  நோயின் தன்மை குறையும்.
மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டுவர வேண்டும்.

பப்பாளி - சுவையான பப்பாளி சாப்பிடுங்க - TAMIL HEALTH TIPS

பப்பாளியில் ஏராளமான அளவில் வைட்டமின் சி உள்ளது.   இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவற்ற தன்மையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எளிதில் கிடக்கக்கூடிய பப்பாளி கல்லீரலை பலப்படுத்துவதோடு, நோயை தடுக்கும் மருந்தாக அமைகிறது. பப்பாளியில் உள்ள வேதிப்பொருள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தனமை கொண்டது.

வெங்காயத்தை கொண்டு கல்லீரலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் மருந்து தாயாரிக்கலாம். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்

கிராம மீன் குழம்பு - VILLAGE FISH KULAMBU

Image result for FISH KULAMBU VILLAGE

வடை கறி Meat dumplings

பாலக் மட்டன் பாஸ்தா - Palak Mutton Pasta

https://4.bp.blogspot.com/-uxw64_BucEw/W92G8ESA-XI/AAAAAAAAQD0/z5K5mk598GIGSJ7Jqgps8k0O7D9fehcXQCLcBGAs/s1600/Mutton%2Bpasta-%2BJal.jpg

உடலில் Vitamin B1 குறைந்தால்... - Health Tips

Image result for vitamin b1

தலைவலியைத் தடுப்பது எப்படி?


பளிச் முகத்துக்கு 10 டிப்ஸ்! - BeautyTips

Image result for beauty tips

Blog Archive

Popular Posts