Recents in Beach

பற்களின் மஞ்சள் கறையை நீக்கி பளிச்சிட உதவும் சூப்பரான டிப்ஸ்




தினமும் காலையில் எழுந்து பற்கள் விலக்கும் பலரும் பற்களின் முன்புறத்தில் இருக்கும் கரையை நீக்குவதில் மட்டும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் பற்களின் பின்புறம் உள்ள மஞ்சள் கறைகள் நமது வாயின் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதித்து விடுகிறது.

எனவே பற்களின் பின்புறம் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு சூப்பரான டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

கல் உப்பு

தினமும் டூத் பேஸ்ட்டில் சிறிதளவு உப்பு சேர்த்து 2 முறை பற்களை துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். ஆனால உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும்.


பேக்கிங் சோடா

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, டூத் பிரஷை நீரில் நனைத்துப் பின் அந்தக் கலவையைத் தொட்டு பற்களைத் துலக்கி நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும்.

ஆரஞ்சு பழத்தின் தோல்

பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க இரவு தூங்கம் முன் ஆரஞ்சு பழத்தின் தோலை பற்களில் நன்றாக தேய்த்து, அடுத்த நாள் காலையில் பற்களை கழுவ வேண்டும்.


எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊறவைத்து, பின் பற்களை நன்கு கழுவ வேண்டும். இதை தொடர்ந்து 2 வாரங்களுக்கு 2 முறை செய்ய வேண்டும்.

பழ வகைகள்

ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் ஆகிய அனைத்தையும் தினமும் சாப்பிட்டு வந்தால் பற்களை வெண்மையாக மாற்றலாம்.


சாம்பல் கரி

வீட்டில் உள்ள சாம்பல் கரியை டூத் பேஸ்ட்டுடன் சேர்த்து துலக்கினால் பற்களின் வெள்ளையாகுவதுடன், வலிமையாக இருக்கும்.