தினமும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வருவதால், இதய நோயின் அபாயத்தை பாதியாக குறைக்கலாம். பருப்பு வகைகளில் ஒன்றான வால்நட்-ஐ தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், சிலருக்கு வால்நட்ஸ்- ஐ தொடர்ந்து கொடுத்து,
அதன் மூலமாக அவர்களது உடலில் உள்ள கரையாத கொழுப்புகளை நல்ல கொழுப்பாக மாற்றுவதை கண்டறிந்துள்ளனர். வால்நட்ஸ் சாப்பிடுவதால் அவர்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆய்வாளர்கள், உடல் பருமன் அதிகமாக உள்ள 30 முதல் 65 வயதிற்குட்பட்ட 45 பேரை இந்த ஆராய்ச்சியில் உட்ப்படுத்தினர். அவர்கள் அனைவரும் ஆய்வு தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு டயட்-ல் இருந்தனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகமான வால்நட்ஸ்-ஐ சப்பிடக் கொடுத்தனர். அப்போது அவர்கள் டயட் இருந்ததைவிட அதிக அளவிலான நன்மைகளை உணர்ந்தனர். இதுகுறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பென்னி கிரிஸ்-எவர்டன் கூறும்போது, ரெட் மீட் சாப்பிடுவதை விட, பல வகையான உணவுகளை சாப்பிடுவதைவிட இது மாதிரியான வால்நட்ஸ் -ஐ சாப்பிடுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை பாதியாகக் குறைக்கலாம். வால்நட்ஸில் நல்ல கொழுப்புக்கள் ஏராளமான அளவில் இருக்கின்றன. சாச்சுரேட்டட் கொழுப்புக்களுக்கு பதிலாக மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களை உட்கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.
மேலும்பல பயனுள்ள உடல் நல குறிப்புகளை அறிந்துகொள்ள கீழே உள்ள தலைப்பை கிளிக் செய்யுங்கள்
1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!
22. எப்பொழுது எல்லாம் தண்ணீர் பருக வேண்டும் தெரியுமா?எப்பொழுது எல்லாம் தண்ணீர் பருக வேண்டும் தெரியுமா?
23. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா ?