Recents in Beach

சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?


சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...!


🔖♨மருத்துவ விழிப்புணர்வு பதிவு

உடல் எடையை குறைக்க டயட் கடைபிடிப்பது என்பது இன்று மிகவும் சாதாரணமான அதேசமயம் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் அவர்களின் உடலமைப்புக்கு ஏற்றவாறு ஒரு டயட்டை கடைபிடிக்கின்றனர். டயட் கடைபிடிப்பது என்பது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. டயட்டால் பல நன்மைகள் இருந்தாலும் அதில் சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. டயட்டால் உங்களின் சில உடலுறுப்புகளுக்கு சிக்கல்களை ஏற்படலாம். அதுமட்டுமின்றி இது உங்களின் ஆரோக்கியத்தை மறைமுகமாக பாதிக்கக்கூடும். உங்களுக்கு ஏற்படும் சில ஆரோக்கிய கோளாறுகளுக்கு உங்களின் டயட்டே கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் டயட் உங்களை பலவீனமாக்குவதன் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.





எளிதில் சளி பிடிப்பது குளிர் மற்றும் மழைக்காலங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும், ஏனெனில் இந்த பருவத்தில்தான் நீங்கள் எளிதில் நோயில் விழுவீர்கள். மோசமான டயட் முதல் வைட்டமின் குறைபாடு வரை உங்கள் உடலை பலவீனமானதாக மாற்றும். வைட்டமின் ஏ,பி6 மற்றும் சி போன்றவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த அவசியமாகும். இதனை உங்கள் டயட்டில் தவிர்ப்பது உங்கள் உடல் பலவீனம் அடைய முக்கியக் காரணமாகும்.

தலைவலி தலைவலி என்பது அனைவருக்கும் அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான். ஆனால் நீங்கள் டயட் தொடங்கிய பிறகு அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் நீங்கள் உங்கள் டயட்டை சோதனை செய்ய வேண்டியது அவசியமாகும். நீங்கள் டயட்டுக்காக சாப்பிடும் சில பொருட்கள் மற்றும் தவிர்க்கும் சில பொருட்கள் உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.


எனவே அபிகா உணவுகளை கண்டறிந்து தவிர்ப்பது நல்லது. உடல் பருமன் வயிறு வீக்கம் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை ஆகும். குறிப்பாக ஆண்களுக்கு இது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் வாயுக்கோளாறு இருப்பது சாதரணமான ஒன்றுதான், ஆனால் இது தொடர்ச்சியாக இருந்தால் உங்கள் டயட் உங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று அர்த்தம்.

விறைப்புத்தன்மை எப்போதாவது உடல் கோளாறு அல்லது மனக்கோளாறு காரணமாக நீங்கள் உறவில் ஆர்வம் காட்டாமல் இருப்பது சாதாரணமானதுதான். ஆனால் அதுவவே தொடர்ச்சியாக இருந்தால் உங்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சினை ஏற்படப் போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.





இதற்கு முக்கியக் காரணம் இனிப்பு ஆகும். உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளும் அதிகப்படியான சர்க்கரை பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முதன்மை ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது. எனவே உங்கள் உணவில் அதிக சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.

காலை நேர சோர்வு நீங்கள் காலையில் எழும் போதே மனோசோர்வுடனும், எரிச்சலுடனும், கோபத்துடனும் எழுந்தால் அதற்கு காரணம் நீங்கள் காலையில் சாப்பிடும் உணவுதான். காலையில் நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்களின் அன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது என்பதை முடிவு செய்வதாக இருக்கிறது. புரோட்டின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை உறுதிசெய்கிறது. இது மனநிறைவு, மகிழ்ச்சியான மனநிலை போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கத் தேவையான ஆற்றலை வழங்கும். எனவே உங்கள் காலை உணவு புரோட்டின் நிறைந்ததாக இருக்கட்டும்.


சருமம் பொலிவை இழப்பது முகப்பரு மற்றும் தடிப்புகளை மறந்து விடுங்கள், உங்கள் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நீங்கள் சாப்பிடும் உணவுகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. நீங்கள் டயட்டை கடைபிடிக்கும் போது உங்கள் சருமத்தில் மாற்றங்களோ, கோளாறுகளோ ஏற்பட்டால் அதற்கு உங்கள் டயட்தான் காரணம். எனவே உங்கள் சருமம் பொலிவை இழந்தால் உடனடியாக உங்களை டயட்டில் மாற்றம் கொண்டு வாருங்கள். 

எடை குறையாமல் இருப்பது உங்கள் எடை அதிகரிக்க உங்கள் உடலில் அதிகமாக இருக்கும் கலோரிகள் மட்டும் காரணமல்ல, உடல் பருமனும் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். நீங்கள் டயட் மூலம் கலோரிகளின் அளவை குறைத்தாலும் உங்கள் உடல் எடையை குறைக்க இயலாது. எடையை குறைக்க டயட் மட்டுமின்றி உடற்பயிற்சிகளும் அவசியமாகும். கலோரி குறைக்கப்பட்ட டயட்டுடன் உடற்பயிற்சியும் செய்தால் மட்டுமே எடை குறைப்பு சாத்தியமாகும்.

 நோய்யற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

மேலும்பல பயனுள்ள உடல் நல குறிப்புகளை அறிந்துகொள்ள கீழே  உள்ள தலைப்பை கிளிக் செய்யுங்கள்

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!


23. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா ?