இன்று கீரைகள் என்பதே மறந்து கொண்டே போகிறது. இதற்கு காரணம் நம்மிடையே காணப்படும் வாழக்கை முறையே ஆண், பெண் இருவரின் வேலை சுமையை மனதில் கொண்டு உணவகங்களில் வாங்கும் துரித உணவுகளையே நாம் எடுத்து கொள்கிறோம்.
நம் முன்னோர்கள் எந்த பருவத்தில் எந்த கீரை சாப்பிடலாம், ஆரோக்கியத்தை அளிக்கும் என அனுபவித்து தெரிவித்துள்ளனர்.
அவைகளை பார்ப்போம்.
பின் பனிக்காலம் : பங்குனி – சித்திரை
காலையில் : முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, பசலைக்கீரை
மதியம் : முளைக்கீரை, புளியாரைக்கீரை, பருப்புக் கீரை
இரவு : முட்டைகோஸ், கொத்துமல்லி, பொதினா
இளவேனிற்காலம் : வைகாசி – ஆனி
காலையில் : முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, தூதுவளைக் கீரை
மதியம் : அரைக்கீரை, சிறுக்கீரை, வல்லாரைக்கீரை, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை
இரவு : முட்டைகோஸ், கொத்துமல்லி, பொதினா
முதுவேனிற்காலம் : ஆடி –ஆவணி
காலையில் : பொதினா, கொத்தமல்லி, தூதுவளை, முருங்கைக் கீரை
மதியம் :முருங்கைக்கீரை, கொத்தமல்லி, வல்லாரைக்கீரை, தூதுவளைக்கீரை, அரைக்கீரை
இரவு : முட்டைகோஸ், கொத்துமல்லி, பொதினா
கார்காலம் : புரட்டாசி – ஐப்பசி
காலையில் : முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கரிசலாங்கண்ணி, பொதினா
மதியம் : அரைக்கீரை, அகத்திக்கீரை, குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, முருங்கைக்கீரை
இரவு :பிரண்டை, முட்டைகோஸ், பொதினா
கூதிர்காலம் : கார்த்திகை – மார்கழி
காலையில் : பொதினா
மதியம் : முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி, தூதுவளைக் கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை.
இரவு : எந்த கீரையும் உண்ணக் கூடாது
முன் பனிக்காலம் : தை – மாசி
காலையில் : கரிசலாங்கண்ணி
மதியம் : புளிச்சக்கீரை, பசலைக்கீரை
இரவு : எந்த கீரையும் உண்ணக் கூடாது