Tamil Health Tips - அல்சரை குணப்படுத்துவது எப்படி? இதை மட்டும் செய்திடுங்க

ulcer treatment

அல்சர் வருவதற்கு முக்கிய காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.

இதற்காக நாம் கண்ட கண்ட மருந்துகளை பாவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அல்சர் வந்துவிட்டால் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் கவனம் குறைவாக விட்டு விட்டாள் அல்சர் மிகவும் அதிகமாகிவிடும்.

தற்போது அல்சரை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று பார்ப்போம்.
சாப்பிட வேண்டியவை

    மணத்தக்காளி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் அல்சர் விரைவாக குணம் ஆகும். எனவே அந்த கீரையை சூப் செய்தோ இல்லை என்றால் பொரியல் செய்தோ வாரத்திற்கு மூன்று நான்கு தடவை சாப்பிட்டு வந்தால் விரைவில் அல்சர் குணமாகிவிடும்.

    அல்சர் இருப்பவர்கள் தினமும் சோற்றில் தேங்காய்ப் பாலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண் குணமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் கொப்பரைத் தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் அல்சர் குணமாகும்.

    பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடலில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவாக வளர செய்து அது புண்களை ஆற்றிவிடும்.

    தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் பழரசத்தை குடித்து வருவதன் மூலமும் அல்சரால் ஏற்படக்கூடிய உடல் வலியை தடுக்க முடியும்.

    பாகற்காயை விட பாகற்பழம் அல்சருக்கு மிகவும் சிறந்தது இதை சமைத்து சாப்பிட்டால் வயிற்றில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் உடலும் குடலும் பலம் பெறும் மல பிரச்சினை எதுவும் இருக்காது.

    வேப்ப இலையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அரசர் மட்டும் இல்லாமல் வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் வயிற்றிலுள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

    அல்சர் உள்ளவர்கள் தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் விரைவில் அந்த நோய் குணமாகிவிடும்.

    புழுங்கல் அரிசியில் சாதம் வடித்த கஞ்சியை வயிற்றுப்புண் உள்ளவர்கள் குடித்து வந்தாலே நல்ல குணம் கிடைக்கும்.

    அல்சருக்கு அகத்திக்கீரை மிகவும் சிறந்தது ஒரு கப் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் சீக்கிரமாக குணமாகும் அகத்திக் கீரையைச் சூப்பாக வைத்தும் குடிக்கலாம்.

    சிறப்பான ஒரு தீர்வு நெல்லிக்காய் ஜூஸில் தயிரை சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    50 மில்லி அத்திப்பட்டை சாரும் 50 மில்லி பசும் பாலும் சேர்த்து கலந்து அதில் கொஞ்சம் கற்கண்டு போட்டு இந்த 100 மில்லியை குடித்து வந்தால் வயிற்று புண் மற்றும் வாய் புண் அனைத்தும் குணமாகும். அத்தி இலையுடன் சம அளவு வேப்ப இலையை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தாலும் அல்சர் குணமாகும்.

சாப்பிட கூடாதவை

    அல்சர் உள்ளவர்கள் காபியை அதிகமாக குடித்தால் அதில் உள்ள அமிலம் மேலும் நிலைமையை மோசமாக்கிவிடும். அதனால் அல்சர் உள்ளவர்கள் காபி, டீ, போன்ற பானங்களை தவிர்த்து விடுங்கள்."

    காரமான உணவுகள் அல்சர் பிரச்சனையை மிகவும் மோசமாகிவிடும். இரைப்பையில் எரிச்சலை உண்டாக்கி மிகவும் அவஸ்தைக்கு உள்ளாக்கிவிடும் ஆகவே அல்சர் குணமாக வேண்டும் என்றால் கார உணவை சாப்பிடவே கூடாது.

    சுத்திகரிக்கப்பட்ட மாவால் தயாரிக்கப்பட்ட வெள்ளை நிற பிரட்டை அல்சர் இருக்கும் பொழுது சாப்பிட்டால் அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும்.

    மாட்டிறைச்சியில் கொழுப்புகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் இதை அல்சர் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் மேலும் நிலைமை மோசமாகிவிடும்.

    அல்சர் இருப்பவர்கள் ஆல்கஹாலை அருந்தினால் அது செரிமான மண்டலத்தை பாதிக்கும் எனவே அல்சர் இருப்பவர்கள் ஆல்கஹால் அருந்துவதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    அல்சர் உள்ளவர்கள் பால் பொருட்களை சாப்பிட்டால் அது வயிற்றில் அமிலத்தை அதிகமாக உற்பத்தி செய்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். மேலும் அல்சர் குணமாக வேண்டும் என்றால் பால் பொருளை சாப்பிடக்கூடாது.

Tamil Health Tips - குடல் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டுமா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்ககுடல் நாம் உண்ணும் உணவுகளை செரிமானம் செய்கின்ற ஒரு முக்கிய உறுப்பு ஆகும்

நாம் உண்ணும் தேவையற்ற உணவுகளே நமது குடலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளி விடுகிறது.

இதனால் குடல் சீக்கிரமாகவே உருக்குலைந்து விடுகின்றது.

குறிப்பாக அதிக கொழுப்பு கொண்ட உணவுகள், ஃபாஸ்ட் பூட்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் குடல் சீர்கேடு அடைகிறது. இவைதான் குடலில் அழுக்குகள் சேர்வதற்கு முக்கிய பங்காகும்.

குடலை சுத்தம் செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது. அவற்றில் இயற்கை முறையே அற்புதமாக வேலை செய்யும்.

அந்தவகையில் எலுமிச்சை குடலை சுத்தம் செய்வதற்கு அற்புத பொருளாக கருதப்படுகின்றது.

தற்போது எலுமிச்சை வைத்து குடலை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை

    எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
    ஆப்பிள் சாறு 2 ஸ்பூன்
    சிறிது உப்பு

செய்முறை

முதலில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சாறு ஆகிய இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் குடலில் உள்ள அழுக்குகள் சட்டென வெளியேறி குடல் ஆரோக்கியமாக காணப்படும்.

Tamil Health Tips - உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்திடுங்க


இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கூறப்படுகின்றது.

இரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை ‘இரத்த அழுத்த நோய்’ அல்லது ‘இரத்தக் கொதிப்பு’ என்று கூறுகிறோம்.

இதைக் கண்டுபிடித்து குணப் படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு மாஸ்கோ கால்பந்து கிளப்பின் மருத்துவரான லு, ஹுன் சென், பழங்கால சீன மருத்துவம் ஒன்றை பரிந்துரைக்கிறார்.

மேலும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றினால், விரைவில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் என்று சொல்கின்றார்.

தற்போது இந்த மருத்துவத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முதல் முறை

இரத்த அழுத்தம் உயரும் போது, படத்தில் காட்டியவாறு காது மடலின் பின்புறத்தில் விரலைக் கொண்டு மேலும் கீழுமாக மென்மையாக மசாஜ் அல்லது அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இப்படி ஒரு பக்கம் 10 முறையும், மற்றொரு பக்கம் 10 முறையும் செய்ய வேண்டும்.

இரண்டாம் முறை

இந்த முறைப்படி, படத்தில் காட்டியவாறு காதிற்கு 1/2 இன்ச் முன்பு விரலை வைத்து, மூக்கின் நுனி வரை மென்மையாக தழுவ வேண்டும்.

இப்படி இரண்டு பக்கமும் செய்ய வேண்டும். இதனாலும் இரத்த அழுத்தம் சீராகும்.

சீன மருத்துவத்தின் படி, ஓர் குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீராவதோடு, இரத்த அழுத்தமும் சீராகி, விரைவில் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Tamil Health Tips - தேனை இதனுடன் மட்டும் சேர்த்து உட்கொள்ளுங்கள்: உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருமாம்


சித்த மருத்துவத்தில் தேனுக்கு என்றே தனிச்சிறப்பே உள்ளது.

தேனில் எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலாகும்.

புற்றுநோய் முதல் ஆஸ்துமா வரை உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவராணியாக திகழ்கின்றது.

மேலும் இது ஓர் இயற்கை சுவையூட்டி என்பதால், சர்க்கரைக்கு பதிலாக இவற்றை உணவுப் பொருட்களில் கலந்து உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமின்றி குறிப்பாக தேனை ஒருசில பொருளுடன் கலந்து குடித்து வருவதால், உடலின் பல பிரச்சனைகள் குணமாகும். அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.

    இரவில் படுக்கும் முன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வருவதோடு, இதயமும் பலம் பெறும்.

    பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, அத்துடன் தேன் கலந்து குடித்தால், உடலின் சக்தி அதிகரிக்கும்.

    எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர, இருமல் பிரச்சனை நீங்கும்.

    மாதுளையை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, அத்துடன் தேன் கலந்து குடித்து வர, உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

    தேனை சுடுநீருடன் கலந்து சாப்பிட்டால், ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பித்தம் நீங்கும்.

    ரோஜாப்பூவை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான சூடு குறையும்.

    நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடித்து வர, இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.

    தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால், குடல் புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.

    கேரட் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

    ஆரஞ்சு பழச்சாற்றுடன சேர்த்து கலந்து குடித்து வர, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

Tamil Health Tips - ஞாபக மறதி அதிகமாகிட்டா? அப்போ இந்த டீயை குடிங்கமனிதனாக பிறந்த அனைவருக்கும் உள்ள ஒரு நோய் தான் ஞாபக மறதி.

மறதி (Amnesia) என்பது ஒரு வகையான நினைவுகளை இழக்கும் நிலை என்று கூறப்படுகின்றது.

மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்காக மருத்துவரிடம் சென்று தான் மருந்துகள் எடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் கறிவேப்பிலை மட்டுமே போதும். இது ஞாபக மறதியை அடியோடு விரட்டுகின்றது.

தற்போது உங்க ஞாபக மறதியையும் குணப்படுத்தலாம் என்பதை பார்போம்.
தேவையானவை

    கறிவேப்பிலை - ஒரு கப்
    தண்ணீர் - 2 கப்
    சீரகம் - சிறிதளவு
    வெல்லம் - சிறிதளவு
    கருப்பு உப்பு - சிறிதளவு

செய்முறை

முதலில் சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

பின் நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும்.

ஐந்த நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.

இந்த டீயை குடிப்பதனால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

Tamil Health Tips -நுரையீரலில் அழுக்கே சேராம இருக்கணுமா? இவற்றை சாப்பிட்டாலே போதும்அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடிக்கும் மக்கள்தொகையின் உயர்வு காரணமாக, சுவாசப் பிரச்சனைகள் எப்போது அதிகமாகவே உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் நமது நுரையீரல் ஆரோக்கியமற்று காணப்படுவது தான்.

உடல் சிறப்பாக செயல்படுவதற்கு நமது நுரையீரல் முக்கிய பங்காற்றுகிறது.

இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.

இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி புகைத்தல் மதுபானம் போன்றவற்றாலும் நுரையீரல் பெரிதும் பாதிப்படைகின்றது.

உங்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால், அவற்றை சிறப்பதாக செயல்பட கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது அவை என்ன என்ன பார்ப்போம்.

    நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பிரக்கோலி ஒன்றையு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.

    ஆப்பிளில் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால், அது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    கை நிறைய சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா மற்றும் இதர சுவாச கோளாறுகளை எதிர்த்து போராடும். மேலும் இந்த ஒமோகா 3 அசிட்டில் அழற்சியை எதிர்க்கும் புரதங்கள் உள்ளன.

    அகாய் மற்றும் ப்ளுபெர்ரி இரண்டும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க திறம்பட செயல்படும் பெர்ரி ஆகும். இவற்றில் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், செல் சேதமாவதை எதிர்த்து போராட உதவும்.

    பிரக்கோலியை அப்படியே சமைக்காமல் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுபவர்கள் அல்லது லேசாக வெண்ணெய் சேர்த்து வதக்கி சாலட்டாகவும் சாப்பிட்டு வரலாம்.

    கெய்ன் மிளகு உள்ள கேப்சைசின் மேல் மற்றும் கீழ் சுவாச பாதை இருந்து சளி சவ்வுகள் பிரித்து பாதுகாக்கிறது. இந்த மிளகில் தேநீர் வைத்து குடிப்பதன் மூலம்,அதிலுள்ள பீட்டா கரோடின் ஆஸ்துமா அறிகுறிகளை பெருமளவில் குறைக்கசிறப்பாக செயல்படுகிறது.

    இஞ்சி அழற்சியை எதிர்ப்பது மட்டுமில்லாமல், நுரையீரலில் இருந்து மாசூட்டிகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது. மேலும் இது நெரிசலை நீக்குதல், காற்றோட்டத்தை சரிசெய்தல் மற்றும் நுரையீரலில் சுழற்சியை போன்றவற்றின் மூலம், நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

    ஆளி விதைகள் கதிர்வீச்சுக்கு முன்பு நுரையீரல் பாதுகாப்பதுடன், அதனால் ஏற்படும் சேதத்தையும் பெருமளவில் குறைக்கிறது.

    பூண்டு ப்ளேவேனாய்டுகளை மட்டுப்படுத்துவதால், க்ளூடாதியோன் உற்பத்தியை ஊக்குவித்து, டாக்சின் மற்றும் கார்சினோஜீன் குறைவதை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

    உடல் செயல்பாடுகளை சிறப்பாக செயல்பட வைக்க தண்ணீர் தான் சிறந்த வழி. காய்ந்த நுரையீரல் எரிச்சல் மற்றும் அதிக அழற்சிக்கு வழிவகுக்கும். எனவே தினமும் ஆறு முதல் எட்டு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மஞ்சளில் அழற்சியை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலுள்ள கர்குமின் என்ற சேர்மம் அழற்சியில் இருந்து விடுபடவும், ஆஸ்துமாவால் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

Tamil Health Tips - சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள்!

 


இது ஒரு நோயல்ல. குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது இரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம்.

மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள்.

சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நுழைவாயில். இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்... என ஒரு பெரும் பட்டியலே உண்டு.

சரி... சர்க்கரை நோயை முற்றிலுமாகப் போக்க முடியுமா? முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்.

சர்க்கரை நோய் என்றால் என்ன, ஏற்பட என்ன காரணம், தவிர்க்க வேண்டிய உணவுகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்... அனைத்தையும் பார்க்கலாம்.

வகைகள்

டைப் 1 சர்க்கரைநோய்: சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.

டைப் 2 சர்க்கரைநோய்: பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள்.

காரணங்கள் - அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute stress): மனஅழுத்தம் ஹார்மோன் சமநிலையைப் பாதிப்பதால், இன்சுலின் பணி மந்தமடையும்.

உணவு: உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கும், உடல்பருமன் அதிகரித்து அதை கவனத்தில்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பரம்பரை: பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும். அதிகக் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், அவர்களின் வயதான காலத்தில் டைப்-2 டயாபடீஸால் பாதிக்கப்படுவார்கள்.

தொற்று: சில சமயங்களில் காயங்களாலோ, அறுவை சிகிச்சையின் போதோ ஏற்படும் தொற்றுகள் ஹார்மோன்களைப் பாதிப்பதால், சுரப்பிகளின் பணி நின்றுபோகும். டைப் 1 சர்க்கரை நோயை ஏற்படுத்தும் இந்த வைரஸ்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை பாதித்து, இன்சுலினைச் சுரக்கும் கணையத்தின் (பான்கிரியாஸ்) செல்களை அழிக்கக்கூடியவை.

வயது: பொதுவாக நடுவயதினரை இது தாக்கும்.

அதீதக் கொழுப்பு: உடல்பருமனால் இடுப்பைச் சுற்றிச் சேரும் அதிகக் கொழுப்பு, இன்சுலினின் பணியை முடக்கும்.

கர்ப்பகாலம்: இந்தச் சமயத்தில் பிளசென்ட்டாவின் ஹார்மோன்களால் இன்சுலின் அளவு கூடும். இதனால் டயாபடீஸ் ஏற்படும்.அறிகுறிகள்.

* அதிக தாகம்
* அதிகப் பசி
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* மங்கும் பார்வைத்திறன்
* எடை கூடுதல் அல்லது குறைதல்
* புண்கள் ஆறும் தன்மை குறைதல்
* தோல் அரிப்பு
* சிறுநீர்த் தொற்று
* நீர்ச் சமநிலைக் குறைபாடு இந்த அறிகுறிகளுக்குப் பின்னரும் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், கோமாவோ உயிரிழப்போ கூட ஏற்படலாம்.

கண்டறியும் முறைகள்

சிறுநீரகப் பரிசோதனை: வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து `+’ முதல் `+ + + +’ வரை என குறிப்பிடப்படும்.

இரத்தப் பரிசோதனை: இதன் சாம்பிளும் வெறும் வயிற்றிலும், காலை உணவுக்குப் பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இதில் கணக்கிடப்படும் அளவு 110 mg/dl - 180 mg/dl-க்கு அதிகமாக இருந்தால் `டயாபடீஸ்’ என்கிறார்கள்.

HbA1C டெஸ்ட்: இதுவும் ஒரு ரத்தப் பரிசோதனைதான். இதன் மதிப்பு 7 அல்லது 7-க்கு கீழே இருந்தால் நார்மல். உடலின் சுகர் கட்டுப்பாட்டு திறனை அறிய உதவுகிறது.

சிகிச்சை முறைகள்

சிகிச்சையின் முக்கிய அம்சங்களில்

* உணவு
* உடற்பயிற்சி
* இன்சுலின் ஊசி மருந்துடன் மாத்திரைகள்
* டயாபடீஸைக் குறித்த விழிப்புணர்வுஆகியவை அடங்கும்.

சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்...

* கீரைகள்
* சூப் வகைகள்
* எலுமிச்சை
* வெங்காயம்
* புதினா
* வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்
* நட்ஸ்
* நறுமணமூட்டிகள் (Spices).

தவிர்க்கவேண்டிய உணவுகள்...

* தேன்
* சர்க்கரை
* ஸ்வீட்ஸ்
* டிரை ஃப்ரூட்ஸ்
* குளூகோஸ்
* சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்
* கேக், பேஸ்ட்ரீஸ்
* பொரித்த உணவுகள்
* இனிப்பான குளிர் பானங்கள்
* மது
* ஜூஸ் வகைகள்

சாப்பிடவேண்டிய மாதிரி மெனு...

காலை எழுந்தவுடன்… வெதுவெதுப்பான நீர், ஒரு கிளாஸ் லெமன் டீ(அல்லது)ஆடை நீக்கப்பட்ட ஒரு டம்ளர் பால்.

காலை உணவு - இட்லி-2, தோசை-1, சாம்பார் - 1 கிண்ணம், மீடியம் சைஸ் ஆப்பிள் (அல்லது)

சப்பாத்தி-2, சென்னா மசாலா - 1/2 கிண்ணம், கொய்யா-1 (அல்லது)கோதுமை பிரெட், முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட், ஆப்பிள்-1.

காலை இடை உணவு - தயிருடன் கலந்த வெள்ளரி சாலட் (அல்லது)

ஏதாவது ஒரு சூப் - 1 கப்.

மதிய உணவு - சாதம் - 100 கிராம், பருப்பு - 20 கிராம் (அல்லது)

சாம்பார் - 1/2 கப், அரைக்கீரை அல்லது பொன்னாங்கண்ணி பொரியல் - 100 கிராம், கத்திரிக்காய் புளி கொத்சு - 100 கிராம், மோர் - 1 டம்ளர். (அல்லது)

சிக்கன் சூப் - 1 கப், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் - 20கி, ஃப்ரைடு ரைஸ் - 100 கி (வீட்டில் தயாரிக்கப்பட்டவை), வறுத்த கோழி - 2 லெக் பீஸ், ஆலோவேரா டிரிங்க் - 1 கிளாஸ்.

மாலை - 2 - 3 பாதாம் பருப்புகள், லெமன் ஜூஸ் - 1கிளாஸ்(அல்லது)

பாசிப் பயறு சுண்டல் (50கி), ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ்.

இரவு உணவு - ஃபுல்கா சப்பாத்தி (2), சென்னா மசாலா, பருப்பு, பயறு – அரை கப், தயிர் பச்சடி - 30 கிராம்(அல்லது)

சோள சிறுதானிய தோசை (2-3), புதினா சட்னி – அரை கப். (அல்லது)வெஜிடபிள் சாண்ட்விச் - 2.

படுப்பதற்கு முன்னர்... - ஆப்பிள், கொய்யா, திராட்சை கலந்த சாலட் (அல்லது)

ஏதாவது ஒரு பழம், ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ்.பழங்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் சில உணவுகள்...

* வெஜிடபிள் சாலட்
* ஃப்ரூட் சாலட்
* ஆவியில் வேகவைத்த உணவுகள் (இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை)
* வேகவைத்த மீன்
* முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட்
* பருப்பு, பயறு, சுண்டல் வகைகள்
* கீரைப் பொரியல்
* இனிப்பு இல்லாத காபி, டீ
* இனிப்பு இல்லாத இஞ்சி டீ, பிளாக் டீ
* எல்லா வகையான சூப்

பின்பற்றவேண்டிய சில விஷயங்கள்...

* மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவு முறையை பின்பற்றவேண்டியது அவசியம்.
* பசியைத் தாங்கக்கூடிய, ஆனால் கட்டுப்பாடான உணவு முறை அவசியம். கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக பசியோடு இருக்கக் கூடாது.
* குறைந்த எண்ணெயிலும் உப்பு இல்லாமலும் சமைப்பது நல்லது. பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும்.
* அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். உணவுக்கு முன்னர் அருந்தும் ஒரு டம்ளர் நீர், உணவின் அளவைக் குறைக்கும்.
* அதிகமாக வேக வைக்கப்படும் காய்களிலிருந்து சத்துகள் வெளியேறி வீணாகும். உணவை அளவோடு வேக வைத்தால், சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.
* ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு முறை உடலில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
* கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
* சாப்பிட்ட உணவின் கலோரிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கவும் வேலை செய்யவும் வேண்டும்.
* டயட்டீஷியனின் ஆலோசனையின் போது, நமக்குள்ள அசௌகரியங்களைக் குறிப்பிட்டு ஆலோசனை பெற வேண்டும்.
* ஆறு மாதத்துக்கு ஒரு முறை உடல் பரிசோதனையும், மாதத்துக்கு ஒரு முறை எடை பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.
* உங்கள் மருத்துவர் அல்லது உணவு ஆலோசனை நிபுணர் பரிந்துரைத்த சத்தான உணவு வகைகளை உட்கொள்ளவும்.
* மருத்துவரின் அறிவுரைப்படி சிறந்த உடற்பயிற்சிகளை, குறைந்தது 30 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும்.
* பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
* கால் பாதங்களில் வெட்டுகள், கொப்புளம், புண், வீக்கம் அல்லது காயங்கள் இருக்கின்றனவா என்று தினமும் பரிசோதிப்பது நல்லது. வெளியில் சென்று வந்தவுடன் கால்களை நன்கு கழுவவும், இந்தப் பழக்கம் பாதங்களைப் பாதுகாக்க உதவும்.
* தினசரி இரண்டு முறை பல் தேய்த்து வாய் கொப்பளிப்பது நல்லது.
* இரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலையும் உணவு உண்ணும் முறையால் கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ளவும்.

இரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்பு உணவுகள்...

பாகற்காய் - தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக் கொண்டால், டயாபடீஸ் வராமல் தடுக்கும். இதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பாகற்காயில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

வெந்தயம் - வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

நெல்லி - இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தினமும் 2 நெல்லிக்காய் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.'

கறிவேப்பிலை - இது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும். தினசரி 10 முழு கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டு வந்தால், பரம்பரை சர்க்கரை நோயையும், உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம்.

கொய்யா - கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து, டைப் - 2 சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகளும் சத்து மிகுந்தவை. கொய்யா இலைகளைக் காயவைத்து, பொடியாக்கி, நீரில் கொதிக்கவைத்து குடித்துவர, சர்க்கரைநோய் வருவதைத் தடுக்கலாம்.

முருங்கை இலை - முருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும்.

பட்டை - தினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

உடற்பயிற்சி - சரியான, முறையான உணவோடு உடற்பயிற்சி செய்வது சர்க்கரை நோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். தினமும் உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகோ (உடலில் சர்க்கரை அதிகமாகும் நேரம்) அல்லது காலை வெறும் வயிற்றிலோ உடற்பயிற்சி செய்யலாம்.

சில நேரங்களில் உடற்பயிற்சிக்கு பின்னர் ஹைபோகிளைசீமியாவின் (Hypoglycemia) அறிகுறிகளான சர்க்கரைக் குறைபாடு ஏற்படலாம். இந்த நேரங்களில் குறைந்த சர்க்கரை அளவை ஈடுகட்ட, சக்கரைக்கட்டி அல்லது மிட்டாய் சாப்பிடலாம்.

Tamil Health Tips - சக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா ??

 

மனிதர்களை வாட்டக்கூடிய புது வகையான நோய்கள் இன்றைய உலகில் தோன்றிய வண்ணம் உள்ளன. ஒரு காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என்று கூறப்பட்ட சக்கரை வியாதி நோய், இன்று எந்த பேதங்களும் இல்லாமல் மனிதர்கள் அனைவரையும் பீடிக்கிறது. இந்த நீரிழிவு உண்மையில் ஒரு உடல்நல குறைபாடு தானே தவிர ஒரு நோயல்ல என்பது சிலரின் கருத்தாக உள்ளது. அந்த நீரிழிவு குறைபாட்டை கட்டுப்படுத்தும் சில சித்த மருத்துவ குறிப்புகளை இங்கு காண்போம்.


 நீரழிவு குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் ஒரு மனிதனின் கணையத்தில் உற்பத்தியாகும் “இன்சுலின்” ஹார்மோனின் குறைபாட்டால் ஒருவருக்கு ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரித்து, ஒட்டுமொத்த உடலியக்கத்தை பாதிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒரு நபரின் குடும்ப பரம்பரையில் யாருக்கேனும் இந்த நீரிழிவு குறைபாடு ஏற்பட்டிருந்தால், அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் இந்நோய் அல்லது குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அடிக்கடி உணவு உண்ணாமல் இருப்பது, முறையான உடற்பயிற்சியில்லாமல் இருப்பது போன்றவையும் நீரிழவு ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கிறது. சக்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உயர்வு ஏற்படுவது சக்கரை நோய் வருவதற்கான ஒரு வகை அறிகுறியாகும். அதே போல திடீரென அடிக்கடி அதிக அளவு பசி மற்றும் தாகம் ஏற்படுவதும் சக்கரை நோய்க்கான அறிகுறியாகும். இயல்பான நிலையில் இருந்து மாறி, சிறிய வேலை செய்தால் கூட உடல் சோர்வு ஏற்படுவது, அடிக்கடி தலை சுற்றுவது போன்ற உணர்வுகள் கூட சக்கரை நோய்க்கான அறிகுறியாகும். மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் ஒரு மருத்துவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


 சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்: வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மேலும் தினமும் மாலையில் ஒரு கப் சுண்டல் சாப்பிடுவது நல்லது. அதோடு அடிக்கடி இடையில் பசி எடுத்தால் பாதாம், அக்ரூட் ஆகியவற்றை சாப்பிடலாம்.


 சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய கீரை வகைகள்: அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாகவோ அல்லது ஏதேனும் ஒருவகையில் தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதன் மூலம் அவர்களின் உடலிற்கு தேவையான சத்து கிடைப்பதோடு சக்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.


சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்: பொதுவாக சக்கரை நோயாளிகள் எந்த பழ வகையையும் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சக்கரையின் அளவு அதிகரிக்கும் என்றொரு கருத்து உண்டு. ஆனால் சக்கரை நோயாளிகள் சில பழவகைகளை சாப்பிடலாம். அப்படி அவர்கள் சாப்பிட வேண்டிய சில பழ வகைகள் இதோ.

  நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். தினம் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடலாம். கொய்யா காய் சாப்பிடலாம். பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம். மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே ஒருநாளைக்கு சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிட கூடாது.


 சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் கோதுமை கோதுமை நார் சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு தானியம் ஆகும். இதை கொண்டு செய்யப்படும் உணவுகளை தினமும் இரு வேளை அல்லது ஒரு வேளையாவது நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் உண்ண வேண்டும். ஆனால் பாக்கெட்டில் வரும் கோதுமை மாவை கொண்டு எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். ஏன் என்றால் சக்கரை நோயை அதிகரிக்கும் சில பொருட்கள் பாக்கெட் கோதுமை மாவில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகையால் நீங்களே கோதுமையை கடையில் வாங்கி அரைத்து அதில் உணவு சமைத்து சாப்பிடுவது நல்லது. wheat மஞ்சள் நம் நாட்டின் பூர்வீகமான ஒரு மூலிகை மற்றும் உணவுப்பொருள் மஞ்சள். பழங்காலத்திலிருந்தே இந்த மஞ்சளை பல நோய்களை போக்க நமது முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர். நீரிழிவு குறைபாடு கொண்டவர்களுக்கு சிறுநீரகங்களும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அதை தடுப்பதற்கு மஞ்சள் பயன்படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களை அதிகம் உண்ண வேண்டும்.


  பூண்டு பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் பூண்டு. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் சிறந்தது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்களின் தினசரி உணவில் பூண்டு இடம்பெறுமாறு செய்து கொள்வது நன்மை அளிக்கும்.


  ஏலக்காய் மலைகளில் விளைகிற இந்த ஏலக்காயை பச்சையாக மெல்லுவதாலும், உணவில் சேர்த்துக்கொண்டு உண்பதாலும் இதிலுள்ள சக்திகள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சமன்படுத்தி நீரிழிவை கட்டுப்படுத்துகிறது.


முட்டை மற்றும் மத்தி மீன் அசைவ உணவுகளில் கோழி முட்டை மற்றும் கடல் மீனான மத்தி மீனை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்பதால் அவர்கள் உடலுக்கு சத்தை கொடுத்து, அவர்களிடம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.


 சக்கரை நோய் உள்ளவர்கள் தவிக்க வேண்டிய காய்கறிகள்: வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை சக்கரை நோயாளிகள் தவிர்பது நல்லது.


சக்கரை நோய் உள்ளவர்கள் தவிக்க வேண்டிய பழ வகைகள்: சப்போட்டா, பலாப்பழம், மாம்பழம் ஆகிய பழ வகைகளை சக்கரை நோய் உள்ளவர்கள் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இது தவிர அதிக இனிப்புள்ள பழங்களையும் தவறது நல்லது.


 சக்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சில மூலிகை வகைகள்: ஆவாரம் பூவை கூட்டு அல்லது பொரியலாக செய்து சாப்பிடலாம். அல்லது அந்த பூக்களை வேகவைத்து அந்த நீரை தேநீருக்கு பதிலாக பருகலாம். இதன் மூலம் சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். அதே போல தினமும் 100மி.லி அளவு அருகம்புல் சாறை அருந்தலாம் அல்லது கொத்தமல்லி சாறு, நெல்லிக்காய் சாறு, கறிவேப்பில்லை சாறு போன்றவற்றில் ஏதோ ஒன்றை தினமும் 100மி.லி அளவு அருந்தலாம்.

Tamil Health Tips - சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய - சாப்பிடக்கூடாத உணவுகள்


சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. அந்த வகையில் இவர்கள் சாப்பிடக்கூடிய - சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய - சாப்பிடக்கூடாத உணவுகள்

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவுகள்:

கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை மாவு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், து.பருப்பு, பாசிபயறு, உளுத்தம்பருப்பு.

காய்கறிகள்:- கேரட், பீட்ருட் தவிர்த்து மற்ற காய்கறிகளை சாப்பிடலாம். எல்லா கீரை வகைகளையும் சாப்பிடலாம்.

பழங்கள்:- ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி போன்ற பழ வகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம், கொழுப்பு நீக்கப்பட்ட பால், அதிக புளிப்பில்லாத மோர், சூரிய காந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்லெண்ணை, ஆலிவ் எண்ணெய், சர்க்கரை இல்லாத காபி, டீ அளவோடு சாப்பிடவும். முந்திரி, பாதாம், வால்நட் சாப்பிடலாம்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிக்காய், சர்க்கரையில் செய்த இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் வகைகள், கேக் வகைகள், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அண்ணாசிபழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரீச்சம்பழம், எருமைபால், தயிர், பாலாடை, வெண்ணை, நெய், பால்கோவா, ஆட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணை, வனஸ்பதி, பாமாயில், எண்ணையில் பொறித்த உணவு வகைகள், (சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா) பிரட், பன், கேக், பப்ஸ், பிஸ்கட், ஊறுகாய் வகைகள், வேர்கடலை சாப்பிடக்கூடாது.

Tamil Health Tips - சர்க்கரை நோயை 100 சதவீதம் கட்டுப்படுத்தும் உணவுகள்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சர்க்கரை நூய்
உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு உண்டு. மிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரிவதில்லை. ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகிறது.

அறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்ள முடியும் என்றாலும் பலரும் அதனை பெரிதாக அலட்டிக் கொள்வதேயில்லை. பின்னர் நோய் முற்றியவுடன் தான் சிகிச்சைகளை ஆரம்பிக்கிறோம். திடீரென உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாது, அப்படியே வந்திருந்தாலும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா அப்படியானால் இந்த முறையை பின்பற்றுங்கள்.

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாகத்தான் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தவிர்க்க :

பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். அதனால் அவ்வகை உணவுகளை நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவிர்த்திடுங்கள்.

உணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன் என்று பட்டினியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ரத்தச்சர்க்கரையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயை அளவாக உணவில் சேர்க்க வேண்டும். கேரட் தவிர மற்ற கிழங்கு வகை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பாகற்காய்:

பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டா கரோட்டினும் உள்ளது. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும்.

மஞ்சள்:

கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்' (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்' என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைகின்றன. இதனை சீராக்க குர்குமின் என்ற வேதிப்பொருள் தேவை அவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவுகிறது.

இதனால் சர்க்கரை நோய் குறித்த பயம் உங்களுக்கு வேண்டாம். இந்த குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் மஞ்சளில் அதிகமாக இருக்கின்றன.

நார்ச்சத்து :

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இரைப்பை, சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படும் வேகத்தைக் குறைக்கின்றது.

இதனால், உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. எனவே, நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், பூண்டு, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ், புரோகோலி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, ஆகியவற்றை உங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.

பட்டை:

பட்டை, வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும்.

நட்ஸ்:

நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது.

சிட்ரஸ் பழங்கள்:

சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, போன்றவற்றில், வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது, சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உடலில் உள்ள காயம் விரைவில் ஆற உதவுகிறது. நோய்த்தொற்றைத் தடுக்கும். உடல் அசதியைக் குறைத்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும்.

கிரீன் டீ:

கிரீன் டீயில் உள்ள சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதுமையை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் செல்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் சுறுசுறுப்பாக்குகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வருகிறது.

பீன்ஸ் :

பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

வெந்தயம்:

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தயத்தை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

இவற்றில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயமின், நிகோட்டின் அமிலங்களும் நிறைந்து உள்ளன. அவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.

வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ சர்க்கரைநோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கிறது.

நாவல் பழம்:

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

நாவல் பழக் கொட்டைகளை பொடியாக்கி தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் குறைந்திடும்.

சிறுதானியம் :

அரிசி, கோதுமை ஆகியவற்றைவிட சிறுதானியம் மிகவும் சிறந்தது. சிறுதானியத்தில் வெறும் மாவுச்சத்து மட்டும் இன்றி நார்ச்சத்து, புரதச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்திருக்கின்றன.

எனவே, சர்க்கரை நோயாளிகள் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி ஆகியவற்றைப் பிராதன உணவாக ஏதாவது ஒரு வேளையாவது தினமும் சாப்பிடுவது நல்லது.

கோதுமை :

சர்க்கரை நோய் இருப்பவர்கள் பெரும்பாலானோர் உணவில் கோதுமையை சேர்க்க வேண்டும் என்று சொல்லி சப்பாத்தி சாப்பிடுகின்றனர். கடைகளில் விற்கும் பாக்கெட் கோதுமை மாவுகளில் மைதாவும் கலந்திருப்பதால் அவற்றல் எந்தப்பலனும் இல்லை.

முழு கோதுமையை வாங்கி, மைதா சேர்க்காமல் அரைத்து, எண்ணெய் குறைவாகச் சேர்த்து, சப்பாத்தி செய்து சாப்பிடலாம். பாக்கெட் கோதுமை மாவைத் தவிர்க்கவும். மூன்று வேளையில் ஏதாவது ஒரு வேளை சப்பாத்தி எடுத்துக்கொண்டால் போதுமானது.

இறைச்சி :

அசைவ உணவு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் மீன் சாப்பிடலாம். அதே போல நாட்டுக்கோழி இறைச்சியை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

ஆட்டுக்கறி , மாட்டுக்கறி,பாயிலர் கோழி போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். முட்டை சாப்பிடும் போது வெள்ளைக்கரு மட்டும் சாப்பிட வேண்டும்.

பருப்பு வகைகள் :

உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, ஆகியவற்றில் புரதச் சத்து நிறைந்துள்ளது. அதுபோல் முளை கட்டிய பயறு வகைகளையும் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். வைட்டமின் பி மற்றும் சி சத்து குறிப்பிடத்தக்க வகையில் இதில் உள்ளது.

எண்ணெய் :

உணவில் கலோரிகளை அதிகரிப்பது சமையல் எண்ணெய்தான். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன் படுத்தலாம். ஆனால் அவற்றையும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.

நெல்லிக்காய் :

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ முறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது, அரை நெல்லிக்காய். இதில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றைக் குடிப்பது கணையத்தைத் தூண்டும்.

இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து, அதன் விதையை அகற்றிவிட்டு அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு டீஸ்பூன் அளவு சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

பூண்டு :

பூண்டில் 400-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன. இதன் பலன்கள் அளவற்றது. சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் பூண்டுக்கும் உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் உணவில் பூண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள சில ரசாயனங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. கல்லீரலானது இன்சுலினின் ஆற்றலை குறைப்பதைத் தவிர்த்து, உடலுக்குப் போதிய அளவு இன்சுலின் கிடைக்கச் செய்கிறது.

பற்கள் :

சர்க்கரை நோயால் கண், சிறுநீரகம், பாதம் ஆகியவை பாதிக்கப்படுவதைப் போன்று அதிகம் பாதிக்கப்படுவது ஈறுகள்தான். சர்க்கரை நோய் அதிகரிக்கும்போது, பல் ஈறுகள் பலவீனம் அடைந்து பல் ஆடுதல் பிரச்னை ஏற்படும்.

பல்லுக்கும் ஈறுக்கும் இடையே சிறிய வாய்க்கால் போன்ற அமைப்பு உள்ளது. இது, 1.2 மி.மீ. அளவுக்கு ஆழமாக இருக்கும். இங்குதான் பற்களைப் பாதுகாக்கும் திரவம் சுரக்கிறது. பற்களில் உணவுத் துகள்கள், கரை படியும்போது ஈறு பாதிக்கப்படும்.

இந்த ஆழமானது 3 முதல் 4. மி.மீ. அளவுக்கு ஆழமாவதை ‘கம் பாக்கெட்' என்று சொல்லப்படுகிறது . இந்த பாக்கெட்டில் நோய்த் தொற்று ஏற்படும்போது அது சர்க்கரை நோயின் பாதிப்பையும் அதிகரிக்கிறது. எனவே, பல்லில் நோய்த் தொற்று வராமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.


random posts

Blog Archive