Recents in Beach

உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்-(UDAL BARUMANAI KURAIKKA YELIYA VEETU KURIPPUGAL)

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்...
1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும். 
தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
 
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
 
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
 
பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.
 
இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.
 
அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
 
உயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.
 
பச்சையான முட்டை கோஸ் அல்லது சமைக்கப்பட்ட கோஸ்காயில் மாவுச்சத்தை கொழுப்பு சத்தாக மாற்றமடைவதை தடுக்கூடிய சத்துகள் உள்ளது. எனவே முட்டைக் கோஸ் உடல் பருமனை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.