Recents in Beach

மஞ்சள் பல் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்???

மஞ்சள் பல் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்???

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் (Teeth Problems Solutions In Tamil)..!

ஒருவரின் முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்கள் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.

அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள்.
இதையும் படியுங்கள்–>சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..!

சரி வாங்க பற்களில் ஏற்படும் மஞ்சள் கறை நீக்குவதற்கு என்னென்ன வழிகள் (teeth problems solutions in tamil) இருக்கின்றன என்று இவற்றில் பார்ப்போம்.
பற்கள் மஞ்சள் கறை படிவதற்கான காரணங்கள்:

பற்கள் மஞ்சள் கறை காணப்படுவதற்கு காரணம் என்னவென்றால், வயது, பரம்பரை காரணங்கள், முறையற்ற பல் பராமரிப்பு, தினமும் அதிகளவு டீ, காபி குடிப்பது, சிகிரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைகளே.

பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. எனவே சரியான பற்கள் பராமரிப்பு இருந்தாலே போதும். என்றும் பல் வெள்ளையாக இருக்கும்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் என்னென்ன உள்ளது என்று இப்போது நாம் படித்தறிவோம்.
பற்கள் பராமரிப்பு :1

கொய்யா இலை:

தினமும் இரண்டு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும். நன்றாக மென்றபின் அவற்றை துப்பிவிட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை செய்து வர பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். நீங்கி பல் வெள்ளையாக மாறும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து செய்துவரவேண்டும்.
பற்கள் பராமரிப்பு :2

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பல் வெள்ளையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.
பற்கள் பராமரிப்பு :3

வெள்ளை வினிகர்: 2

டீஸ்பூன் வெள்ளை வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து, தினமும் இருமுறை அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி பல் வெள்ளையாக மாறும்.
பற்கள் பராமரிப்பு :4

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்குவதில் பெரிதும் உதவியாக இருக்கிறது.

இந்த பேக்கிங் சோடாவை 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொண்டு, 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து கொண்டு தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். பல் வெள்ளையாக மாறும்.
இதையும் படியுங்கள்–> குழந்தைபால் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்?
பற்கள் பராமரிப்பு :5

எலுமிச்சை:

எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பற்களில் தேய்க்கலாம் அல்லது எலுமிச்சை தோலைக் கொண்டு பற்களில் தேய்த்து பின்பு குளிர்ந்த நீரில் வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும், பல் வெள்ளையாக மாறும்.
பற்கள் பாதுகாப்பு :6

ஆப்பிள்:

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.
பற்கள் பாதுகாப்பு :7

உப்பு:

உப்பை கொண்டு தினமும் பற்களை தேய்த்து வர, பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.

அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், உப்பு ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.
பற்கள் பாதுகாப்பு :8

அடுப்பு சாம்பல்:

தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது அடுப்பு சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையாகும்.

அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும்.
பற்கள் பாதுகாப்பு :9

ஆரஞ்சு தோல்:

இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள்.

இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.