Recents in Beach

திகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்



எலுமிச்சை மற்றும் உப்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விடுபடலாம்.

வெஜிடேபிள் ஆயில் பாத வறட்சியால் ஏற்படும் குதிகால் வெடிப்புகளை நீக்க, கால்களை நன்கு சுத்தமாக கழுவி, பின் பாதத்தில் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து, கால்களுக்கு சாக்ஸ் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கால்களை கழுவ வேண்டும். இதனை தினமும் பின்பற்றி வந்தால், பாதங்கள் மென்மையாவதோடு, குதிகால் வெடிப்புகளும் நீங்கிவிடும்.

வாழைப்பழம் வாழைப்பழத்தை நன்கு மென்மையாக அரைத்து, அதனை பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அன்றாடம் இதனை செய்து வரை குதிகால் வெடிப்புகள் நீங்கும்.

வேஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் உலர வைத்து, பாதங்களின் மேல் எலுமிச்சை சாறு மற்றும் வேஸ்லின் கலந்த கலவையை தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் கழுவினால், குதிகால் வெடிப்பு வருவதை அறவே தவிர்க்கலாம்.

தேன் தேனில் அதிகப்படியான ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அதனை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அந்த நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை ஸ்கரப் செய்தால், அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும்.

அரிசி மாவு 2-3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவில், சிறிது தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.

ஆலிவ் ஆயில் குதிகால் வெடிப்பை போக்க சிறந்த நிவாரணி என்றால் அது ஆலிவ் ஆயில் தான். அதற்கு ஆலிவ் ஆயிலை காட்டனில் நனைத்து, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, சாக்ஸ் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஓட்ஸ் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில், சிறிது ஜிஜோபோ ஆயில் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

நல்லெண்ணெய் தினமும் இரவில் படுக்கும் போது, நல்லெண்ணெயை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து படுத்தால், குதிகால் வெடிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல், பாத வறட்சியையும் தவிர்க்கலாம்.

அவகேடோ மற்றும் வாழைப்பழம் அவகேடோவை நன்கு மசித்து, அதில் சிறிது வாழைப்பழ கூழை ஊற்றி கலந்து, அந்த கலவையை பாதங்களில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், பாதங்களுக்கு அதிகப்படியான சத்துக்கள் கிடைத்து, பாதங்கள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.