Recents in Beach

வாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்



மனநிலையில் மாற்றம்: மன அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது தினமும் அரைமணி நேரம் ஜாக்கிங் செய்து வந்தால் மனநிலையில் நல்ல முன்னேற்ற காணலாம். ஆயுள் நீடிக்கும்: தினமும் 10 – 20 நிமிடங்கள் ஜாக்கிங் செய்து வந்தால், உங்கள் மரணத்திற்கான சதவீதம் 30 – 60% குறைகிறதாம். உடல் எடை: தினமும் ஜாக்கிங் செய்வதனால் உடல் எடைக் குறையும். வாக்கிங் செய்வதை விட இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரை அதிக உடல் எடைக் குறைவு ஏற்படும்.







மூட்டு வலி: தினமும் ஜாக்கிங் செய்பவர்களுக்கு மற்றவர்களை விட 25% குறைவாக தான் மூட்டு வலிப் பிரச்சனைகள் வருகிறது. வளர்ச்சிதை: மாற்றம் ஜாக்கிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்தால், உங்கள் நுரையீரல் நன்கு விரிவடையும், இரத்த ஓட்டம் சீராகும், உடற்திறனில் நல்ல மாற்றம் தெரியும். இதயம்: தினமும் குறைந்தது ஒரு கி.மீ தூரம் ஜாக்கிங் சென்று வந்தீர்கள் என்றால் இதயப் பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் 50% வரை குறையும்.




நீரிழிவு நோய்: குறைந்தது வாரம் ஐந்து நாட்களாவது அரைமணி நேரம் ஜாக்கிங் செய்துவந்தால் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும். எலும்புகள்: தினமும் ஜாக்கிங் செய்வதனால் உங்கள் எலும்புகள் வலுமை அடைகின்றன. இதனால் முதுமையில் ஏற்படும் மூட்டுப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.







உறக்கம்: தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதனால் தூக்கமின்மை குறையும், நல்ல உறக்கம் வரும். ஞாபக சக்தி: ஜாக்கிங் செய்வதனால் உங்கள் மூளை சுறுசுறுப்பு ஆகிறது, இதனால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மேலும்பல பயனுள்ள உடல் நல குறிப்புகளை அறிந்துகொள்ள கீழே  உள்ள தலைப்பை கிளிக் செய்யுங்கள்

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!


23. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா ?