முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்துவ குணங்கள் நிறைந்தவை. பசியைத் தூண்டும் தன்மை கொண்டது. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். இந்த இரு நல்ல குணங்களுக்காகவே முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
முள்ளங்கிக் கிழங்கு வகையை சேர்ந்த முள்ளங்கி வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்களில் உள்ளன. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட மிகவும் ஏற்றது. மேலும் சுவைக்காகவும் சேர்க்கப்படுவது.
குறிப்பாக சிவப்பு முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை. ஈரப்பதம் மிகுந்து, புரதசத்து,கொழுப்பு, தாது உப்புக்கள், இரும்புசத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், ஆகிய சத்துக்கள் நிறைந்து உள்ளது. முள்ளங்கியின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. குதிரைமுள்ளங்கி, காட்டுமுள்ளங்கி, மலைமுள்ளங்கி என பலவகைகள் இதில் உண்டு. நாம் சாப்பிடுவது மலைமுள்ளங்கி.
முள்ளங்கியில் உள்ள கந்தக சத்தால், ஒருவித காரத்தன்மையும், நெடியும் உண்டாகிறது. முள்ளங்கியில் இருக்கும் பல வகையான கந்தக மூலக்கூறுகளே அதன் முக்கிய மருத்துவதன்மைக்கு காரணமாகின்றன.
இதன் மூலம் நமது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் தொடர்ந்து உடல் நலப் பாதுகாப்புடன் வாழ முடிகிறது. முள்ளங்கி பல நோய்களை கட்டுப்படுத்துகிறது.
முள்ளங்கியின் மருத்துவக் குணங்கள்:-
வைட்டமின்– ஈ சத்து அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சிறந்த கிருமி நாசினியாகவும், உடல் வலிகளை நீக்கும் சக்தி கொண்டதாகவும் முள்ளங்கி இருக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா, மூச்சிரைப்பு, சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கபம் தோன்றும். அதனை முள்ளங்கி வெளியேற்றும். தொண்டைக்கட்டையும், மூக்கு - தொண்டை பகுதியில் ஏற்படும் தொற்று நோய்களையும் முள்ளங்கி குணப்படுத்தும்.
முள்ளங்கி சாறு 30 மில்லியுடன் சிறிது நீர் கலந்து, அரை சிட்டிகை மிளகு தூளும் சேர்த்து பருகினால் கபம் வெளியேறும். தொண்டை அழற்சியும் நீங்கும்.
வயிற்று உப்புசம் ஏற்படும்போது பார்லி கஞ்சியுடன் 30 மிலி முள்ளங்கி சாறு ¼ தேக்கரண்டி இந்துப்பு கலந்து பருகினால் உப்புசம் நீங்கும்.
முள்ளங்கி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்:-
முள்ளங்கி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகின்றது. அதனால் சர்க்கரை நோய் இருப்பவர்கள் முள்ளங்கியை சாலட் செய்து சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. இது சருமத்தை பொலிவாக்கி, இளமையை பாதுகாக்கவும் செய்யும்.கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது முள்ளங்கி:-
முள்ளங்கியில் போலிக் அசிட் உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால் வீக்கம் மற்றும் கர்ப்ப காலத்தில் உண்டாகும் ரத்த அழுத்தம் நீங்கும்.நுரையீரல் தொற்றுக்கு நீக்கும் சக்தி கொண்டது முள்ளங்கி:-
சரும வியாதிகளுக்கு அருமருந்து முள்ளங்கி:-
சரும வியாதிகளுக்கு மகத்துமான நன்மைகளை தருகிறது சரும வியாதிகள். படர்தாமரை நோய், முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தேமல், மங்கு, எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும். முள்ளங்கி விதையில் ஒரு வகையான பிளீச்சிங் பொருள் இருக்கிறது. அதுவே, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.சிறு நீரக கோளாறுக்கு மிகவும் ஏற்றது முள்ளங்கி:-
சிறு நீரக கோளாறு இருப்பவர்கள் தொடர்ந்து தினமும் ஒரு கப் முள்ளங்கி சாறு அருந்தி வந்தால் எரிச்சல் மற்றும் சிறு நீரக வியாதிகள் நீங்கும்.
முள்ளங்கி, சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவுகிறது. தினமும் 50 மிலி முள்ளங்கி சாற்றை சிறிது நீர் கலந்து சாப்பிட்டுவந்தால் சிறு நீரக கற்கள் வெளியேறும். சிறுநீரக தொற்றும் நீங்கும். இதில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரை அதிகப்படுத்தி வெளியேற்றும். அதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும். வீக்கம், உடல் வலியும் போகும்.
முள்ளங்கியை சமைக்கலாமா? முள்ளங்கியை வெள்ளரிக்காயைப் போல் பச்சையாகத்தான் சாப்பிட வேண்டும். வேக வைத்து சாப்பிட்டால் அதிலுள்ள விட்டமின் மற்றும் மினரல்கள் அழித்துவிடும். கேரட்,வெள்ளரி ஆகியவற்றுடன் கலந்து சேலட் செய்து சாப்பிடுவதால் மிகவும் நன்மைகளைத் தரும்.
கல்லீரலின் சிறந்த நண்பன் முள்ளங்கி:-
முள்ளங்கி கல்லீரலுக்கு சிறந்த நண்பன். இதில் உள்ள கந்தக சத்துக்கள் பித்தநீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால் கொழுப்பு மற்றும் மாவு சத்துக்கள் நன்றாக ஜீரணமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது. ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கப்படும். ரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும்.மூல நோய்க்கு அருமருந்து முள்ளங்கி:-
உஷ்ண மிகுதியால் மூல நோய் ஏற்பட்டு அவதிபடுபவர்க்கு இது சிறந்த மூலிகையாகும். நீரிழிவு, நரம்பு தளர்ச்சிகு நல்லது. முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது.குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது முள்ளங்கி:-
பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் வயிற்றுப் பிரச்சினை, ஜலதோஷத்துக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.இட்லி வேகவைப்பது போன்று முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம் நல்ல பலன் தரும். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
குழந்தைகள் மந்தபுத்தி இல்லாமல் சுறுசுறுப்பாய் இருந்து படிக்கவும், நன்கு உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக்கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் முள்ளங்கி:-
முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்க உதவுகின்றது. குடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கும் முள்ளங்கி மருந்தாகும்.சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.முடிவுரை:
அளவுடன் முள்ளங்கியை உண்டு வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.இத்தனை பயன்களைக் கொண்ட இந்த முள்ளங்கியை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம். ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான முள்ளங்கி பற்றி, எல்லோரும் விரும்பி சாப்பிடும் முள்ளங்கியின் பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை தெரிந்துகொள்ளலாம்.