Recents in Beach

நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம்

nenju sali neenga


மேலும் "சளி பிடித்தால் சனியன் பிடித்ததுபோல" என்பது பழமொழி. அதுவும் நெஞ்சுச் சளி என்றால் மிகவும் தொல்லை, இருமல், சுசாசிப்பதில் சிரமம் கூடவே மலச்சிக்கல்.

இதற்கு அற்புத நிவாரணி ஆடு தொடா இல்லை - ஆடு தொடா இலைக்கு வாசிகா என்று வடமொழியில் பெயர். சித்தமருத்துவத்தில் தெற்குத்தனி இடம் உண்டு. வாசாவா வாசகாகிஷ்டம் போன்ற மருந்துகளின் மூலப்பொருள் ஆடாதோடை தான்.

இதன் துளிர் சிறிது எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தி வர சளி தொல்லை நீங்கும். இதன் வேரை இடித்து சலித்து வைத்துக் கொண்டு சிறிதளவு எடுத்துத் தேன்விட்டுக் குழைத்துச் சாப்பிட துரித நிவாரணம் கிட்டும், சிறுவர் முதல் முதியவர் வரை தேனைச் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு வரும் ப்ரைமரிக்காம்ப்ளக்ஸ் அதாவது டி.வி.யின் ஆரம்பநிலை. இதற்கும் ஆடு தொடா இலை - வேர் அத்தனையும் சிறந்த மருந்து ஆகும்.

      நோய்க்கு ஏற்ப ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை தொடர்ந்து சாப்பிடலாம். நிச்சயம் குணம் கிட்டும்.