Recents in Beach

அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!



தக்காளி

அன்றாடம் சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி. தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது. அதிலும் இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் தக்காளியானது உடலுக்கு நன்மைகளை தருவதுடன், சருமத்திற்கும் நன்மைகளை வாரி வழங்குகிறது.

எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த தக்காளியை பலவாறு சமைத்து சாப்பிடுங்கள். இங்கு அந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

சிறந்த ஆன்டி-செப்டிக் பொருள்

உங்களுக்கு தெரியுமா? கைகளில் ஏதேனும் வெட்டு காயம் ஏற்பட்டால், அப்போது பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட இடத்தில் வைத்தால், சிறந்த ஆன்டி-செப்டிக்காக செயல்படும்.

சரும கருமையை போக்கும்

வெளியே வெயிலில் சுற்றிவிட்டு, வீட்டிற்கு வந்ததும் ஒரு தக்காளி துண்டைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்கும்.

சிறுநீரகக் கற்களை கரைக்கும்

தக்காளியில் உள்ள நிக்கோட்டின் ஆசிட், பித்தக் கல் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவியாக இருக்கும்.

நீர்ச்சத்தை அதிகரிக்கும்

கோடையில் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மிகவும் நல்லது. ஏனெனில் அவை உடலை வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும்.

செரிமானத்தை அதிகரிக்கும்

தக்காளியை உட்கொண்டால், அவை எண்ணற்ற செரிமான நொதிகளை உற்பத்தி செய்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைய உதவிப்புரியும்.

இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தக்காளியை சேர்த்து வந்தால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கலாம். ஏனெனில் தங்ககாளியில் சோடியம் குறைவாக இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவி புரிகிறது.

பசியின்மையைத் தடுக்கும்

பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் நல்லது. ஏனெனில் அதனை குடித்து வந்தால், அவை பசியை தூண்டும் நொதிகளை உற்பத்தி செய்யும். அதிலும் தினமும் ஒரு தக்காளியை பச்சையாக அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

கண்களுக்கு நல்லது

தக்காளியில் பீட்டா-கரோட்டின் அடங்கியுள்ளதால், இவை பார்வை கோளாறு ஏற்படுவதை தடுத்து, ஆரோக்கியமான பார்வையைக் கொடுக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோயை குறைக்கும்

ஆண்கள் தினமும் ஒரு தக்காளியை உட்கொண்டு வந்தால், 20 சதவீதம் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.

முகப்பருக்களை எதிர்க்கும்

தக்காளியில் சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி உள்ளது. எனவே தினமும் இதன் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், பருக்கள் வருவது குறைவதுடன், அதனால் ஏற்படும் தழும்புகளையும் தடுக்கலாம்.

இதயத்திற்கு மிகவும்சிறந்தது

தக்காளியில் வைட்டமின் பி6 நிறைந்திருப்பதால், இவை இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து, இரத்த நாளங்களை பாதுகாக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

தக்காளியில் உள்ள வைட்டமின் பி1, சர்க்கரையை எனர்ஜியாக மாற்றக்கூடியவை. எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை எடுத்து வருவது நல்லது.

உடலை சுத்தப்படுத்தும்

புகைப்பிடிப்பவர்கள், தினமும் தக்காளி சூப் குடித்து வந்தால், அதில் உள்ள குளோரோஜெனிக் மற்றும் கொமாரிக் ஆசிட், உடலில் தங்கியுள்ள புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்தும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்

தக்காளிக்கு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. மேலும் இது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சீராக பராமரிக்கும்.

தசைப் பிடிப்புக்களுக்கு நிவாரணம் அளிக்கும்

தசைகளின் ஆரோக்கியத்திற்கு பாஸ்பரஸ் மிகவும் இன்றியமையாதது. இத்தகைய பாஸ்பரஸ் தக்காளியில் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அன்றாடம் சேர்த்து வந்தால், தசைப் பிடிப்புக்கள் மற்றும் வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரத்த சோகையை குணமாக்கும்

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஒன்றாக சேர்ந்து இருக்கும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்

தக்காளியிலும் கால்சியம் நிறைந்துள்ளதால், இதனை உட்கொண்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவுடன் இருக்கும்.

அழகான மற்றும் வலுவான கூந்தல்

தக்காளியானது அழகான மற்றும் வலுவாக கூந்தலைப் பெற உதவி புரியும். ஏனெனில் இதில் எண்ணற்ற அளவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.

சிறந்த வலி நிவாரணி

தக்காளி மிகவும் சிறந்த ஒரு இயற்கையான வலி நிவாரணி. ஏனென்றால் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருக்கிறது. மேலும் நாள்பட்ட வலிகளான ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் இதனை எடுத்து வருவது மிகவும் நல்லது.

எடையை குறைக்கும்

தக்காளியில் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் சூப் போட்டு ஒரு கப் குடித்து வந்தால், எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

முதுமையைத் தடுக்கும்

தக்காளி உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பதை தவிர்த்து, அழகை வழங்குவதிலும் முதன்மையாக உள்ளது. எப்படியெனில் தக்காளியை உணவில் சேர்த்து வந்தாலும் சரி, அதன் சாற்றினை சருமத்தில் தடவி வந்தாலும் சரி, இது விரைவில் முதுமை ஏற்படுவதைத் தடுக்கும்.