Recents in Beach

Tamil Health Tips - குடல் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டுமா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க



குடல் நாம் உண்ணும் உணவுகளை செரிமானம் செய்கின்ற ஒரு முக்கிய உறுப்பு ஆகும்

நாம் உண்ணும் தேவையற்ற உணவுகளே நமது குடலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளி விடுகிறது.

இதனால் குடல் சீக்கிரமாகவே உருக்குலைந்து விடுகின்றது.

குறிப்பாக அதிக கொழுப்பு கொண்ட உணவுகள், ஃபாஸ்ட் பூட்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் குடல் சீர்கேடு அடைகிறது. இவைதான் குடலில் அழுக்குகள் சேர்வதற்கு முக்கிய பங்காகும்.

குடலை சுத்தம் செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது. அவற்றில் இயற்கை முறையே அற்புதமாக வேலை செய்யும்.

அந்தவகையில் எலுமிச்சை குடலை சுத்தம் செய்வதற்கு அற்புத பொருளாக கருதப்படுகின்றது.

தற்போது எலுமிச்சை வைத்து குடலை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை

    எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
    ஆப்பிள் சாறு 2 ஸ்பூன்
    சிறிது உப்பு

செய்முறை

முதலில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சாறு ஆகிய இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வந்தால் குடலில் உள்ள அழுக்குகள் சட்டென வெளியேறி குடல் ஆரோக்கியமாக காணப்படும்.