Recents in Beach

செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval


தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2 
தக்காளி - 2
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 1  ஸ்பூன்
மிளகுத் தூள் -2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

தாளிப்பதற்கு.

பட்டை - சிறு துண்டு

பிரியாணி இலை -1
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 சிக்கனை நன்கு  கழுவி,  அத்துடன்   மிளகாய் தூள்,   மஞ்சள் தூள் மற்றும்  சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது உப்பு  சேர்த்து  நன்கு  பிசைந்து   அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

பின்னர் கடாயை  அடுப்பில் வைத்து, அதில்   4   ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை   போட்டு   தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில்  மீதி  இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி பின் தக்காளியை சேர்த்து  வதக்க வேண்டும்.

அதனுடன்  1 டம்ளர்   தண்ணீர்  ஊற்றி   அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, சிறிது  உப்பு சேர்த்து, அடுப்பை சிம்மில்  வைத்து   கடாயை மூடி   போட்டு  15   நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு  கிளரி  இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

சுவையான  செட்டிநாடு  சிக்கன்  மிளகு வறுவல் ரெடி