தேவையான பொருள்கள்
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
பூண்டு - அரை கப் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
குட மிளகாய் - 2 பெரிதாக நறுக்கியது
வெங்காயம் - 1 நறுக்கியது
சோயா சாஸ்- 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
கார்ன் பிளவர் மாவு - 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
வெங்காயத்தாள் - தேவையான அளவு
ஊற வைக்க
எலும்பில்லாத சிக்கன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
1 முட்டையின் வெள்ளை கரு
கார்ன் பிளவர் மாவு - 2 ஸ்பூன்
மைதா மாவு- 2 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவைாயன அளவு
செய்முறை
முதலில் எலும்புகளை நீக்கிய சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
முட்டையை கலக்கி ஊற வைக்க கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு கடாயில் ஊற்றி சூடானதும் பொன்னிறமாக மெதுவான தீயில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.
.கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், குட மிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள் அனைத்தையும் போட்டு கிளறவும்.
கார்ன் பிளவர் மாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிகறியையும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள் அதில் போட்டு 3 நிமிடம் மூடிபோட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கிளரி இறக்கவும்.