தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கார்ன் ப்ளார் மாவு - 2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வதக்க தேவையானவை
பூண்டு பல் - 10 நறுக்கியது
தக்காளி சாஸ் - 4 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய குடை மிளகாய் - 1
எண்ணெய் - பொரிப்பதற்கு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் நன்கு மிக்ஸ் பண்ணி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் குடை மிளகாய் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன் தக்காளி சாஸ், சோயா சாஸ் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை குறைத்து வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து மல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான டிராகன் சிக்கன் ரெடி.