தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
கோங்குரா - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கீரையை சுத்தம் செய்து நன்றாக மண் போக 3 தடவை தண்ணீரில் கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்.
1 வெங்காயம், தக்காளி ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் சுத்தம் செய்த கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கீரை நல்ல புளிப்பாக இருக்கும். நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
பின்பு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் மற்றொரு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் சிக்கன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5 நிமிடம் வதங்கியதும் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்த பின்பு அரைத்த கோங்குரா விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும். நன்றாக கொதித்து சிக்கனும் கீரை விழுதாக சேர்ந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். சுவையான ஆந்திரா கோங்கூரா சிக்கன் ரெடி.