Recents in Beach

Health Tips Tamil - குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை


சமைத்த உணவை 1½ மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்மையை உருவாக்கும். இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கப்படும்.

8/9 வயதை அடைந்தவுடன் குழந்தைகளை அதிகாலையில் எழுப்புங்கள். ஏதாவது ஒரு செயல் செய்ய வையுங்கள்.
அசைவ உணவு கொடுப்பதை கூடியமட்டும் தவிருங்கள்.
எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுங்கள்.
நிறைய காய்கறிகள், பழங்கள், முளை கட்டிய தானியங்களைக் கொடுப்பது அவர்களை இன்னும் அதிக துடிப்பானவர்களாக, உயிர்ப்புள்ளவர்களாக ஆக்கும்.
வெள்ளைப் பூசணியின் சாறெடுத்து தேன் கலந்து தினமும் உண்பது, வளரும் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கும். இதன் மூலம் அவர்களது கற்கும் திறனும், வளர்ச்சியும் மேம்படும்.
ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வெள்ளை பூசணி தவிர்த்து விடலாம்.
குளிர்பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் கொண்ட மசாலா அடங்கிய உணவுகளை கடைகளில் வாங்கி உண்பதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெற்றோர் தம்முடைய கருத்துக்களை அவர்கள் மேல் திணிப்பதை விட்டுவிட்டு, குழந்தை தனது திறனை தானே கண்டறிய ஊக்குவிக்க வேண்டும்.