தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1 கப்
கருவேப்பிலை கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முருங்கைக்காயை
வேகவைத்து சதைப் பகுதியை ஸ்பூன் வைத்து சுரண்டி எடுத்துக்கொள்ளவும்.
துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
மிளகு,
காய்ந்த மிளகாய், சீரகம் மஞ்சள் தூள் தேங்காய்த் துருவல் சின்ன
வெங்காயம் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக
அரைக்கவும்.
இதனை முருங்கைக்காய் விழு துடன்
சேர்த்து, கடாயில் ஊற்றி வேகவைத்த பருப்பு, உப்பு, கொஞ்சம் தண்ணீர்
சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கி தேங்காய் எண்ணெயில் கடுகு,
கருவெப்பிலை உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து குழம்பில் ஊற்றினால்
முருங்கைக்காய் பொரித்த குழம்பு ரெடி.