Recents in Beach

நாட்டு கோழிச்சாறு | nattu kozhi charu


தேவையான பொருள்கள் .

நாட்டுக்கோழி சிக்கன்  - அரைக் கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி -  2
மஞ்சள் தூள் - அரை  ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
தனியா - 1  ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு -1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்).
தக்காளியைப் பொடியாக  நறுக்கி கொள்ளவும்.

பின்  கடாயில்  எண்ணெய்  ஊற்றாமல்  காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம் மற்றும் கடலைப்பருப்பு போட்டு வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்..

அத்துடன் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.


குக்கரில் எண்ணெய் ஊற்றி,  சிக்கனை  போட்டு வதக்கவும்.


சிக்கன்  வதங்கியதும் தக்காளி, அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து,   5  டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி  2  விசில்  விடவும் .

பின்  10  நிமிடங்கள் கழித்து   குக்கரை திறந்து  மல்லிஇலை தூவவும்.சுவையான கோழிச்சாறு ரெடி .