
உலக ஆர்த்ரிடிஸ் தினம்:
1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் (RMDs) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.
மூட்டு வலி யாருக்கெல்லாம் வரும்: இப்போதைய மருத்துவ முறையால் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதனால் வயதானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்களுக்கு மூட்டு தேய்மானம் அதிகமாக ஏற்படுகிறது. ஆகையால் இவர்களுக்கு மூட்டு வலி வரும். அதிகமான உடற்பருமன் உடையவர்களுக்கும் மூட்டு வலி பிரச்சினை ஏற்படுகிறது. இவர்கள் தவிர்த்து மரபியல் வழியாகவும் மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது.