PART-1
- நாள்பட்ட சளியானது காசநோயாக மாறும். காய்ச்சலை உண்டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். தூதுவளையை பயன்படுத்தி சளி பிரச்சினையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம்.
- 10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்-லாமல் போகும்.
- சளி பிரச்சினைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெள்ளெருக்கம் பூவை பயன்படுத்தி ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து தயாரிக்கலாம்.
- வெள்ளெருக்கம் பூவின் இதழ்களை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற அளவில் எடுக்கவும். இதை நன்றாக கலந்து சுண்டைக்காய் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.
- இது காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு கிடைக்கும். அன்றாடம் இருவேளை மிளகு அளவுக்கு சாப்பிடும்போது ஆஸ்மா சரியாகும். ஆஸ்துமாவுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்தாக வெள்ளெருக்கம் பூ விளங்குகி-றது. ஒரு வெள்ளெருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை தீரும்.
- கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேநீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் போகும். இந்த தேநீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.
PART-2
- நெஞ்சு சளி நீங்க எலுமிச்சை சாறு, தேன் மருந்து : சிறிது எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். தினமும் காபி, டீ க்கு மாற்றாக இந்த பானம் குடிக்க பழகி கொண்டால் நெஞ்சு சளியே இருந்த இடம் தெரியாமல் போகும்.
- நெஞ்சு சளி கரைய மிளகு பால் : மருந்துகுடிக்க முடிந்த காரத்திற்கு ஏற்றவாறு மிளகுத் தூளை பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
- நெஞ்சு சளி நீங்க புதினா, மிளகு மருந்து : புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
- நெஞ்சு சளி குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து : வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.
- நெஞ்சு சளி கரைய தேங்காய் எண்ணெய், கற்பூரம் மருந்து : ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கற்பூரம் கரைய ஆரம்பிக்கும். கற்பூரம் நன்கு கரைந்ததும் பாத்திரத்தை இறக்கி விடலாம். சூடான எண்ணையை கையில் பட்டு விடாதவாறு பாதுகாப்பான இடத்தில் ஆர வைக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் மிக கவனம். சூடான எண்ணெய் கையில் பட்டால் ஆறுவதும் கடினம், தழும்பும் விரைவில் மறையாது.
- தேங்காய் எண்ணெய் நன்கு ஆறியதும் அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.
PART-3
- கடுகை அரைத்துப் பாதங்களில் பூச, ஜலதோஷம் குணமாகும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக்க, ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்மீதும், முதுகுபுறமும் தடவ சளி, இருமல் குறையும்.
- மூக்கில் சளி ஒழுகாமல் இருக்க: மூக்கில் இடைவிடாது சளி ஒழுகிக் கொண்டே இருக்கும் நபர்கள் வெற்றிலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட சளி ஒழுகுதல் நிற்கும்.
- குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், முருங்கைக் கீரையும், உப்பையும் கசக்கி 3 ஸ்பூன் அளவு கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.
- குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், குப்பைமேனி இலையையும், உப்பையும் கசக்கி 5 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.
PART-4
- 1. துளசி இலை _ 10 2. ஓமம் _ ½ ஸ்பூன் 3. பூண்டு _ 1 பல் 4. மிளகு _ 4
- துளசி இலையை நன்கு நீரில் அலசி விட்டு மற்ற பொருட்களுடன் ஒன்றாக சேர்த்து இடித்து (15 மிலி தண்ணீரையும் சேர்த்து ) நைசாக ஆனதும் சாறு பிழிந்து வடிக்கட்டி சிறிது தேனை அதனுடன் நன்கு கலந்துவிட்டு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும்.குழந்தைகள் கத்துவார்கள்.இருப்பினும் தண்ணீரோ,பாலோ ஒரு அரைமணிநேரத்திற்க்கு கொடுக்காமல் இருக்க வேண்டும்.
- சில குழந்தைகள் அழுவதிலேயே வாந்தி போல் சளியெல்லாம் கக்கி விடுவார்கள்.தோண்டையில் சிக்கியிருக்கும் சளியெல்லாம் வெளியே வந்து நல்ல ரிலீஃபாக இருக்கும்.அல்லது மோஷனில் சளி வெளியாகும்.
- இது நான்கு மாத குழந்தைகளிலிருந்தே கொடுக்கலாம்.பயப்படவேண்டாம்……தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டுமே கொடுத்தால் போதும்.அதன் பிறகு நிச்சயம் சரியாகியிருக்கும்.
- இது என் மூன்று குழந்தைகளுக்கும் நான் கொடுத்துவந்த மருந்து.நல்ல பலனளிக்கும்.இப்போது நான் ஊருக்கு போனாலும் என் கொலுந்தரின் பைய்யனுக்கும் நான் தான் இந்த மருந்தை கொடுப்பேன்.எனது இல்லத்தின் கை கண்ட மருந்து இதுதான். எனவே தான் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
- பெரியவர்களுக்கும் இது உகந்ததே. வெறுமெனவே துளசி இலையை காலையில் மென்று சாப்பிடலாம்.
PART-5
வேப்ப எண்ணைய்:-
- சாதாரண சளி காய்ச்சல் கணை இது மூன்றுக்கும் கை கண்ட மருந்து வேப்ப என்ணைய்தான் வேப்ப எண்ணையுடன் ஒன்ரிரண்டு வெள்ளைபூண்டும் சிரிது மிளகும் தட்டிப்போட்டு லேசாக சுட வைத்து வயிற்றைத்தவிர உச்சந்தலையிலிருந்து // //உள்ளங்கால் வரை தடவி விடவும் காச்சல் அரை மணி நேரத்தில் மாறிவிடும் சளி மலத்துடன் வெளியேரும்
- எண்ணைய்தேய்த்தவுடன் சிரிது நேரத்தில் நன்கு வேர்க்கும் பிறகு காச்சல் விடும் மூன்று நாள் வரை தடவலாம் காலை மாலை தேய்க்கவும் சாதாரண சளீகாய்ச்சல் சரியாகிவிடும் நாங்கள் டாக்டரிடம் போனதில்லை அத்ற்கும் பிறகு காய்ச்சல் இருந்தால் அது மற்றகாரணத்தினால் ஏற்பட்டிருக்கும் டாக்டரிடம் காட்டலாம் சாதாரண சளீகாய்ச்சலுக்கு வேப்ப எண்ணையே போதுமானது சளியும் மோஷன் போகும் போது வெளியேறிவிடும் பயமே இல்லை வெளியேதான் தடவப்போறோம் உள்ளுக்கு கொடுக்கலை அதனால் பயம் வேண்டாம்
- உடம்புக்கும் உறுதி கணை இழுப்பு வீசிங்குக்கு நல்ல மருத்துவம் அந்தகாலத்தின் பாட்டி வைத்தியம் இன்றும் கிராமத்தில் கடை பிடிக்கும் பழக்கம் சிறியவர் முதல் பெரியவர் வரை தாராளமாக தடவலாம் என்ன நாற்றத்தைச்சகிச்சுக்கனும் செலவில்லாத சைட் எபெக்ட் இல்லாத கை வைத்தியம் நோயும் தீரும்.
PART-6
- உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல் தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.
- கருமிளகு டீ கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.
- வெங்காய சிரப் ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.
- பூண்டு நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
- இஞ்சி இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம். அதோடு மேலே சொன்ன வழிமுறைகளில் ஒன்றையும் பின்பற்றினால் சளியும் இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போவது உறுதி.
PART-7
- கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள் கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவ்வகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .
- கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. வேறுபெயர்கள் - ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ். கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.
பயன்கள:-
- கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
- வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
- இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
- இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
- இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
- இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்
- இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
- கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
- தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
- மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
- சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது. குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:
- குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.
- இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.
- அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்