Recents in Beach

பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval


தேவையான பொருட்கள்.

சிக்கன் - அரை  கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் -2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு  விழுது- 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்
மல்லி கருவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய்  - 4   ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

சிக்கனை  உப்பு  மஞ்சள்தூள்  சேர்த்து  வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும்  மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கி மசலா வாசனை போனவுடன்  வேகவைத்து உதிர்த்த சிக்கன்  தேவைாயன அளவு  உப்பு  சேர்த்து   நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.


தண்ணீர் சுண்டி சுருள வெந்தவுடன் மிளகு தூள்   நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.

சுவைாயன பிச்சு போட்ட கோழி வறுவல் ரெடி.