Recents in Beach

உடல் எடையில் கவனம்



நமது உயரத்துக்குத் தகுந்த எடையைக் கணக்கிட 'உடல் நிறை குறியீடு (Body Mass Index, BMI)’ பயன்படுகிறது. உங்களின் உயரம் (மீட்டர்), எடையை (கிலோ) பிஎம்ஐ = kg/m2 என்ற சூத்திரத்தில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 18.5 to 24.9 வரை பிஎம்ஐ என்பது ஆரோக்கியமான உடல் எடையைக் குறிக்கும். உலக சுகாதார நிறுவனம், பிஎம்ஐ 25 முதல் 30-க்குள் இருந்தால், 'அதிக எடை கொண்டவர்கள்' என்றும், 30-க்கு மேலிலிருந்தால் 'உடல்பருமன் கொண்டவர்கள்' என்று வரையறுக்கிறது.


 இடுப்புச் சுற்றளவையும் இன்னொரு கணக்கீடாகக் கொள்ளலாம். இடுப்பு சுற்றளவு, ஆண்களுக்கு 94 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும், பெண்களுக்கு 80 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும் இருந்தால், கண்டிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்கு ஆரம்பிக்க வேண்டும்.

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!
ஆண்களுக்கு 102 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும், பெண்களுக்கு 88 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும் இடுப்பு சுற்றளவு இருந்தால், சர்க்கரை நோய், புற்று நோய், இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.