Recents in Beach

குழந்தை புத்திசாலியாகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வளர - குழந்தை வளர்ப்பு முறைகள் !!

child care
குழந்தை நலன் -  குழந்தை வளர்ப்பு

குழந்தைகள் வளர்ப்பு முறைகள் தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு குழந்தைகளை வளர்க்க முற்பட்டால், நீங்கள் நினைத்தவாறு உங்கள் குழந்தை புத்திசாலியாகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வளர ஆரம்பித்துவிடும்.

இதற்கு ஒரு சில குழந்தை வளர்ப்பு முறைகளை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த கட்டுரையில் குழந்தை வளர்ப்புக்கு தேவையான ஒரு சில பயன்மிக்க குறிப்புகள் மற்றும் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.


கரு உருவாக ஆரம்பிப்பதிலிருந்தே குழந்தை வளர்ப்பும் தொடங்கிவிடுகிறது. புதியதாக இதை படிப்பவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. கரு உருவான முதல் வாரத்திலேயே குழந்தையின் மூளை உருவாக ஆரம்பித்துவிடுகிறது.

அதற்கடுத்து இருபதாவது வாரத்தில் நன்றாக கேட்கும் சக்தியையும் பெற்றுவிடுகிறது குழந்தை.  கேட்கும் சக்தியைப் பெற்ற குழந்தையால் கற்ப பையில் இருந்தாவாறே வெளியில் தாய் கேட்கும் குரல், ஒலிகளை சிசுவும் கேட்க முடியும்.
kulanthai-valarppu

இதனால்தான் கர்ப காலத்தில் பெண்கள் நல்லதையே கேட்க வேண்டும். நல்ல சூழலில் இருக்க வேண்டும், நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என சொல்கிறார்கள். தாயிடமிருந்து பெரும்பாலான விடயங்கள் சிசுவை சென்றடைவதால் இவ்வாறு கர்ப்பிணி பெண்கள் அறிவுறுத்தபடுகிறார்கள்.

கர்ப பையில் இருந்து வெளிவந்த பிறகு, குழந்தை மெல்ல மெல்ல வளரும்போது, வீட்டு சூழல் எப்படி உள்ளதோ அதற்கேற்றவாறே வளர தொடங்குகிறது. எனவே வீட்டுச் சூழலை

நல்ல அமைதியான, சுத்தமான, காற்றோட்டமான சூழலாக உருவாக்கி கொடுக்க வேண்டும்.

தாயின் செயல்களையே பெரும்பாலான குழந்தைகள் பின்பற்றுகிறது. தாயின் செயல்பாடுகள் நன்முறைகள் இருந்தால், பிறக்கும் குழந்தையின் செயல்களும் அவ்வாறே இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள் எதைப் பார்க்கிறார்களோ யாரிடம் பழகுகிறார்களோ அதைப்போலவே, அவர்களைப் போலவே கற்றுக்கொள்ள முனைவார்கள். குறிப்பாக Metric School, Play School போன்ற பாலர் பள்ளிகளில் உள்ள ஆயா, ஆசிரியை போன்றோர்களின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றத் தொடங்குகிறார்கள்.

காரணம் 3லிருந்து 4 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளியில் ஆசிரியைகளின் நடிவடிக்கைகள் மற்றும் செயலகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். முதல் நான்கு வயதுக்குள் குழந்தைகள் யார் யாரிடம் பழகுகிறோ, அவர்களின் பழக்க வழக்கங்கள் அப்படியே குழந்தைகளையும் தொற்றிக் கொள்கிறது.

இதனால் குழந்தைகள் யார் யாரிடம் பழக வேண்டும் என்பதை தீர்மானித்து, அவர்களிடம் பழக விடவேண்டும்.

    பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு ரோல் மாடல். அவர்கள் என்ன செய்கிறார்களோ, அதைப் பார்த்துதான் அவர்களுடைய பழக்க வழக்கங்களும் அமையும். நல்ல குழந்தைகளாக வளர்க்க நினைப்பவர்கள், முதலில் நல்ல பெற்றோராக இருக்க வேண்டும்.


உதாரணமாக நீங்கள் அடிக்கடி பொய் பேசினால், அதையே குழந்தையும் செய்ய தொடங்கிவிடும். மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளும், சக நண்பர்களுக்கு உதவுவதில் தயக்கம் காட்டுவதில்லை.

நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் பெற்றோர்களின் குழந்தைகள் 99.9 சதவிகிதம் நல்லவர்களாகவே வளர்கிறார்கள்.

ஜங்க் புட் என்று சொல்லப்படும் ரெடிமேட்,  திடீர் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.  குழந்தைகளின் வளர்ச்சிக்கு இதுபோன்ற உணவுகள் எந்த வகையில் பயனளிக்காது.

இயற்கையாக கிடைக்கும் காய், கறி, கீரை வகைகளே குழந்தைகளுக்கு ஏற்ற சரியான உணவுகளாகும்.

சாதாரணமாக குழந்தைகளை பெற்றோர்கள் திட்டுவார்கள். சில வீடுகளில் கர்ண கடூரமான பேச்சுகளும் திட்டுக்களும் இருக்கும். அவற்றை கேட்கும் குழந்தைகளுக்கு மூளை செயல்பாடு குறைந்துவிடும். அவர்கள் பேசும் பேச்சுக்கள் அனைத்துமே மூளையில் பதிவாகி, நாம் இப்படிதான் போலிருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

உதாரணமாக உனக்கு என்ன சொன்னாலும் மண்டையில ஏறவே ஏறாது.. ராஸ்கல்.. இப்படிப்பட்ட வார்த்தைகள். உனக்கு இங்கிலீஸ்னா சுத்தமாவே வரமாட்டேங்குது.. மண்டு. மண்டு...

இதுபோன்ற வார்த்தைகள் குழந்தைகளை கேட்க கேட்க, நம்மு ஆங்கிலமே வராது போலிருக்கிறது என்ற எண்ணம் ஆழ்மனதில் பதிந்துவிடும். பிறகு என்னதான் ஆங்கிலம் கற்று கொடுத்தாலும், அவற்றை மனதில் இறுத்தி அவர்களால் படிக்கவே முடியாது.

மனித மூளையில் 160 கோடி நியூரான்கள் உள்ளது. ஒவ்வொரு நியூரானிலும் 2 லட்சம் தகவல்கள் சேமித்து வைக்கலாம். மனித மூளையே உலகத்தின் மிகச்சிறந்த சென்ட்ரல் பிராச்சங் யூனிட், ஹார்ட் டிஸ்க் எல்லாமே. மற்றதுதான் சூப்பர் கம்ப்யூட்டர், மினி கம்ப்யூட்டர் இப்படி பட்ட கம்ப்யூட்டர் ஐட்டங்கள்.

மனித மூளையை முழுவதுமாக பயன்படுத்துபவர்கள் யாருமே இல்லை. ஒரு சதவிகித மூளையில் பயன்படுத்தியவர்கள் உலகத்தில் அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் இருக்கிறார்கள். அப்படியென்றால் முழுமையான மூளையை பயன்படுத்துபவர்கள் என்றால் நிச்சயமாக இந்த உலகத்தை அவர்களால் புரட்டி போட முடியும்.

இவ்வளவு திறன்கொண்ட மூளை அனைவருக்கும் இருக்கிறது. குழந்தைகளை திட்டும்போது இவ்வளவு திறன் வாய்ந்த மூளையானது மழுங்கடிக்கப்படுகிறது. விளக்கமாக கூற வேண்டுமென்றால் இயற்கையாகவே மனித மூளையில் 10000 த்திலிருந்து, 15000 வரையிலான நியூரான்கள் அழிந்துவிடும்.

ஒரு குழந்தையை திட்டும்போது, 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான நியூரான்கள் அழிந்துவிடுகிறது. பிறகு அந்த நியூரான்களில் தகவல்களை சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால்தான் குழந்தைகளை திட்டவே கூடாது என கூறுகின்றனர்.

குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடமும் போக ஆரம்பித்துவிடுகிறது. எப்படி படிக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக சத்தம்போட்டு உரக்க படிக்க வேண்டும். அப்போதுதான் மூளை சோர்வடையாமல் இருக்கும். மனதிற்குள்ளேயே படிக்க ஆரம்பித்தால் சீக்கிரமே தூக்கம் வர ஆரம்பித்துவிடும். மூளைக்கு வேலை குறைவதால் இதுபோன்ற தூக்கம் ஏற்படும்.

குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களை வாய்விட்டு பாராட்ட வேண்டும். பாராட்டுக்கு குறைவே இருக்க கூடாது. சில தவறுகளை செய்யும்போது, கவனமாக அந்த தவறால் என்ன பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைச் சொல்லி, இனி அவ்வாறு செய்யாமல் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தையை பாராட்டும்போது, குழந்தையின் செயல்திறன் பல மடங்கு மேன்படுகிறது. பாராட்டும்போது அதனுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கப்பட்டு, மனநிலை ஊக்குவிக்கப்படுகிறது. ஊக்குவிக்கப்படும் குழந்தைகள் விரைவாக கற்றுக்கொள்கிறது.

உங்கள் வீட்டில் குறைந்த பட்சம் ஒரு பத்து புத்தகவங்களாகவது படிக்கும் அலமாரியில் இருக்க வேண்டும். உங்களுக்கு படிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு குட்டி லைப்ரரியை A Small Library நீங்கள் ஏற்படுத்திவிட்டால், குழந்தைகளுக்கு தானாவே படிக்கும் பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

அந்த புத்தகங்களை எடுத்து சில பக்கங்கள் குழந்தைகளுக்கு படித்துக் காட்டலாம். அவ்வாறு செய்யும்பொழுது, அதில் உள்ள நல்ல கருத்துகள் அவர்களை சென்றடைகிறது. அதே வேளையில் நல்ல புத்தகவங்களை படிக்கும் ஆர்வமும் அவர்களை தொற்றிக்கொள்கிறது.

இப்படி சின்ன சின்ன விடயங்ளிகளிலும் கவனம் செலுத்தி, குழந்தைகள் வளர்க்க வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் இல்லையா? அதுபோல நீங்கள செய்யும் ஒவ்வொரு சின்னஞ்சிறு நல்ல செயல்களும் நிச்சயமாக உங்கள் குழந்தைகளை நல்ல பிள்ளைகளாக வளரச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.