Recents in Beach

குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை கற்றுத்தரவேண்டும்


Image result for குழந்தைகள் பணத்தின் அருமை

பொருளியல் நோக்கிலான இந்தக் காலத்தில், ஒவ்வொரு போக்கும் வந்து போய்க்கொண்டிருக்கும் சூழலில், பணத்தை சேமிப்பது என்பது கற்கால வழக்கமாக மாறியிருப்பதால் அடுத்த தலைமுறைக்கு சேமிப்பு பழக்கத்தை கற்றுத்தருவது  சிக்கலாக இருக்கிறது. இதை மேற்கொள்வது எப்படி? என கீர்த்தி ஜெயக்குமார் வழிகாட்டுகிறார்

இலக்குகளை அளியுங்கள்:

ஒரு இலக்கை அளித்து குழந்தைகளுக்கு சேமிப்பதன் அருமையை புரிய வையுங்கள். அவர்கள் சிறிய தொகையை சேமிப்பதில் துவங்கி பின்னர் பெரிய தொகைக்கு முன்னேறட்டும். இந்த பணத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவிடலாம் அல்லது தேவையான ஒரு பொருளை வாங்க செலவிடலாம் என்பதை உணர்த்துங்கள்.



சேமிப்பைப் பற்றி  உரையாடுங்கள்:

குழந்தைகள் பலவித கேள்விகளை கேட்பார்கள். சுறுசுறுப்பான மனது மற்றும் பலவித ஆர்வம் கொண்ட மனது சுவாரஸ்யமானது மற்றும் சவாலானது. நிதி விஷயங்கள் என்று வரும் போது குழந்தைகள் என்று தவிர்க்க வேண்டாம். நிதி போன்ற முக்கியமான விஷயங்களில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே தங்களுடையதும் எனும் உரிமை மற்றும் பொறுப்புணர்வை உண்டாக்கும். எனவே, அவர்களுடன் நீங்கள் உரையாட தயாராக இருங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அவர்களுடன் உரையாடுங்கள்.