Recents in Beach

தேவையற்ற சதையை குறைப்பது எப்படி

பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.
* நல்ல நடைபயிற்சி மிக முக்கியம்.
* நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.)
* நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும் 10 முறை செய்யவும். இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும்.

* எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும்.
* தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும்.
இடுப்பு மற்றும் தொடைக்கு:
* சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10 முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும்.
* நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். இவ்வாறு 20 முறை செய்யவும். நன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.
* முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது…