Search News

பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்


பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை.
அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது.
இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன். அவற்றினை காண்போம்.
மருத்துவ குணங்கள்:
 • இது ஒரு சிறந்த கிருமி நாசினி.
 • வியற்வையை பெருக்கும்,
 • உடற்சக்தியை அதிகப்படுத்தும்,
 • தாய்பாலை விருத்தி செய்யும்,
 • சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,
 • சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்,
 • இரத்த கொதிப்பை தணிக்கும்.
 • உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
 • இதய அடைப்பை நீக்கும்.
 • நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
 • ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.
 •  பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.
 • தொண்டை சதையை நீக்கும்.
 • மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
 • மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.
 • பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.
 • சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.
 • மூட்டு வலியைப் போக்கும்.
 • வாயுப் பிடிப்பை நீக்கும்.
 • இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது

பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள் :
பூண்டு – 5 பற்கள் 
பால் –150 மி.லி. 
தண்ணீர் –150 மி.லி. 
மஞ்சள்தூள்–அரை தேக்கரண்டி 
மிளகு தூள்–அரை தேக்கரண்டி 
பனங்கற்கண்டு–தேவைக்கு 
செய்முறை: 
• பூண்டுவை நசுக்கிக் கொள்ளவும். 
• ஒரு பாத்திரத்தில் பூண்டு, பால், தண்ணீர் கலந்து பூண்டு நன்கு வேகும் வரை சிறு தீயில் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது நீரில் கரையும் சத்துக்களும், கொழுப்பில் கரையும் சத்துக்களும் பாலில் கலந்து சிறந்த ஆரோக்கியத்தை தரும்
• அந்த பாலுடன், மஞ்சள்தூள், மிளகுதூள், பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும். இது பல நோய்களுக்கு மருந்தாகிறது. பாலுடன் சேர்த்து பூண்டுவை சாப்பிடுவதால் அதன் காரத்தன்மை குறையும். 
• காசநோய், விட்டு விட்டு உண்டாகும் ஜூரம், ஆஸ்துமா, மலச்சிக்கல், வயிற்றில் உள்ள கட்டிகள் போன்றவைகளை இந்த பால் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் இதை அடிக்கடி பருகி வரலாம். 
• தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு இதை பருகினால் தூக்கம் நன்றாக வரும்.
* உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.
* உங்கள் முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.
* செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
* பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
* பூண்டு பாலில் உள்ள வலி நிவாரணி தன்மை, இடுப்பு மற்றும் பின்புற கால் வலியினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு நல்லது. எனவே உங்களுக்கு இப்பிரச்சனை இருந்தால் பூண்டு பாலை குடித்து நன்மைப் பெறுங்கள்.

இதய நோயை குணமாக்கும் மூலிகை


தூதுவளைக் கீரையுடன், பூண்டு, இஞ்சி, மல்லி இலை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட இருதய நோயால் உண்டாகும் தீராத இருமல் குணமாகும். மேலும்
நுரையீரல் பலப்படுத்தப்பட்டு இதயமும் வலுவாகும்.
»சிறுகீரை வேரை இடித்து சாறு பிழிந்து, 30 மில்லி லிட்டர் அளவில் காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட சிறுநீர் தாராளமாய் பிரியும். உடலில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேறும். இதய வீக்கம் குணமாகும். அதிக உடல் எடையை குறைக்கும்.
»முருங்கை இலை சாறு, தேன், மிளகு தூள் சேர்த்து சாப்பிட, ரத்தம் அழுத்தம் சீராகும். இதயம் சீராக இயங்கும்.
»அரைக்கீரையை பருப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவர இருதய நோய், கீல்வாத காய்ச்சல், குணமாக்கும்.மேலும் இதய பலவீனம் சரியாகும்.
»மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வர எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம் உறுதியாகும். இதயம் சீராக இயங்கும்.
»வல்லாரை இலையுடன் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம் சீராகும். கொழுப்பினை கரைத்து, நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். மூளை அபாரமாய் செயல்படும். இதய நோய்கள் தீரும்.
»புதினா இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு இவைகளை சம அளவு எடுத்து, பனங்கற்கண்டு கலந்து காய்ச்சி பருகி இதய கோளாறுகள் நீங்கும். நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வு நெஞ்சு வலி ஆகியன தீரும்.
»கொத்தமல்லி இலையுடன், சம அளவு இஞ்சி சேர்த்தரைத்து, கொட்டைப் பாக்களவு காலை, மாலை சாப்பிட மயக்கம் வாந்தி தலைசுற்றல் மற்றும் இதய படபடப்பு ஆகியன தீரும்.
»உத்தாமணி இலையை சாறெடுத்து, அதை ஒரு துணியில் நனைத்து, நெஞ்சு வலி உள்ள இடத்தில் போட வலி உடனே தணியும்.
»மூக்கரட்டை கீரையுடன், உப்பு, புளி, மிளகாய், பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட மலம் தாராளமாகக் கழியும். நோயாளிகளுக்கு இதமான உணவாகும்.
»தாமரைப் பூ, ஆவாரம் பூ ,செம்பருத்தி பூ ஆகியவற்றை சம அளவு கலந்து, கொதிக்கவைத்து சாப்பிட இதய நோய் தீரும்.
»தாமரைப் பூ ,ஆவாரம் பூ ,செம்பருத்திப் பூ ,ரோஜாப்பூ ,கருந்துளசி, சுக்கு ,மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவைகளை 50 கிராம் வீதம் எடுத்து, தூள் செய்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி காலை மாலை சாப்பிட நெஞ்சு வலி,மாரடைப்பு வராது.
»செம்பருத்திப் பூ 10 எடுத்து ,ஒரு டம்ளர் நீர், 5 மிளகு, 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து அருந்த இதய படபடப்பு இதயவலி இதய அடைப்பு ரத்த அழுத்தம் ஆகியவை குணமாகும்.
»வேப்பம் பூவுடன் ,ஆவாரம்பூ சம அளவு சேர்த்து 5 சிட்டிகை மஞ்சள் தூள் 5 மிளகு சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட ரத்த அழுத்தம் சீராகும். நோயில் உண்டாகும் மயக்கம் தீரும்.

Blog Archive

Popular Posts